தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ யாரும் வெளிநாடு செல்லவில்லை அமைச்சர் வெங்கடேஷ் விளக்கம்

 யாரும் வெளிநாடு செல்லவில்லை அமைச்சர் வெங்கடேஷ் விளக்கம்

 யாரும் வெளிநாடு செல்லவில்லை அமைச்சர் வெங்கடேஷ் விளக்கம்


ADDED : பிப் 13, 2026 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2026 05:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''எங்கள் துறை சார்பில், எந்த எம்.எல்.ஏ.,க்களையும், வெளிநாட்டு சுற்றுப்பயணம் அனுப்பவில்லை,'' என கால்நடைத்துறை அமைச்சர் வெங்கடேஷ் தெரிவித்தார்.

பெங்களூரின், விதான்சவுதாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:

எம்.எல்.ஏ.,க்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் செல்வதற்கும், எங்கள் துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை. எங்கள் துறை சார்பில் எந்த எம்.எல்.ஏ.,க்களும், வெளிநாடு செல்லவில்லை. பால் உற்பத்தி தொடர்பாக ஆய்வு செய்ய, எங்கள் சார்பில் யாரையும் அனுப்பாத நிலையில், இதை பற்றி யார் புரளி கிளப்பினர் என்பது தெரியவில்லை.

சட்டசபை நடந்த போது, வெளிநாட்டு சுற்றுலா குறித்து, ஆலோசனை நடந்தது. நீங்களும் வாருங்கள் என, நண்பர்கள் அழைத்தனர். பார்க்கலாம் என, கூறினேன். அதன்பின் எம்.எல்.ஏ.,க்களை அனுப்புவது பற்றி, ஆலோசிக்கவே இல்லை.

சில நண்பர்கள் அவரவர் சொந்த செலவில், வெளிநாடு செல்கின்றனர். அதை அவர்கள் வெளிப்படையாகவே கூறலாம். ஏன் அஞ்சுகின்றனர் என்பது தெரியவில்லை. சுற்றுலா செல்லும் அளவுக்கு, எங்கள் துறையில் பணம் இல்லை. அவரவர் செலவில் வெளிநாடு செல்வதை, சிவகுமார் கோஷ்டி, சித்தராமையா கோஷ்டி என, சர்ச்சை செய்வது ஏன்.

இதற்கும், முதல்வர் மாற்றம் விஷயத்துக்கும், என்ன சம்பந்தம். சிலர் வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு, நிதித்துறைக்கு கடிதம் எழுதினர். அதில் என் பெயரும் இருந்தது. ஆனால் நான் வெளிநாட்டுக்கு செல்லவில்லை. முதல்வர் சித்தராமையாவுடன், நான் 30 ஆண்டுகளாக இருக்கிறே ன். அவருடனான தொடர்பு குறித்து கேள்வி எழுப்பினால், நான் என்ன சொல்வது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us