அரசு அதிகாரிகளை மிரட்டாதீர்கள் குமாரசாமிக்கு அமைச்சர் எச்சரிக்கை
அரசு அதிகாரிகளை மிரட்டாதீர்கள் குமாரசாமிக்கு அமைச்சர் எச்சரிக்கை
UPDATED : நவ 05, 2026 11:51 PM
ADDED : நவ 04, 2026 07:07 PM

ராம்நகர்: ‘அரசு அதிகாரிகளை மிரட்டிப் பார்க்காதீர்கள்’ என, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமிக்கு, கர்நாடக நகராட்சி நிர்வாக அமைச்சர் பாலகிருஷ்ணா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராம்நகரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
இரண்டு முறை முதல்வராகவும், இப்போது மத்திய அமைச்சராகவும் இருக்கும் குமாரசாமி, பெரிய மனிதர் போல நடந்து கொள்ள வேண்டும். சித்தராமையா தொடர்பான வீடியோ வெளியான வழக்கில், உங்களுக்கு தொடர்பு இல்லை என்றால், விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் கொடுங்கள். உங்கள் மீதான களங்கம் நீங்கி விடும்.
டில்லியில் உள்ள தன் வீட்டிற்கு யார், யார் வருகின்றனர் என்பது கூட தெரியாமல் குமாரசாமி இருப்பது வேடிக்கையாக உள்ளது. உங்களைப் பற்றி கூறும் அரசு அதிகாரிகளை மிரட்டிப் பார்க்காதீர்கள். ஹாசன் கலெக்டரை மிரட்டினீர்கள். அவர் உங்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்தார்.
இப்போது, பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங்கை மிரட்டுகிறீர்கள். உண்மையைப் பேசினால் மிரட்டுவீர்களா?
இவ்வாறு அவர் கூறினார்.
