தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மணல் கொள்ளையை தடுக்காத அதிகாரிகளுக்கு மந்திரி 'டோஸ்'

 மணல் கொள்ளையை தடுக்காத அதிகாரிகளுக்கு மந்திரி 'டோஸ்'

 மணல் கொள்ளையை தடுக்காத அதிகாரிகளுக்கு மந்திரி 'டோஸ்'


ADDED : ஜன 27, 2026 05:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 27, 2026 05:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹாவேரி: ஹாவேரியில் மணல் கொள்ளை கும்பல் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை, அமைச்சர் சிவானந்த பாட்டீல் கடுமையாக சாடினார்.

ஹாவேரி மாவட்டத்தின் பல பகுதிகளில், சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் பரவின. மாவட்டம் முழுதும் மணல் மாபியாக்கள் அட்டகாசம் அதிகரித்து விட்டதாகவும் பலரும் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று கோளூர் - கஞ்சூர் தொழிற்பேட்டைக்கு திடீரென மாவட்ட பொறுப்பு அமைச்சர் சிவானந்த பாட்டீல் வருகை தந்தார். சட்டவிரோதமாக மணல் அள்ளப்படும் பகுதிகளை ஆய்வு செய்தார்.

இதையடுத்து, அங்கிருந்த கர்நாடக தொழில்துறை பகுதிகள் மேம்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளை கடுமையாக கண்டித்தார். அவர் பேசியதாவது:

மாவட்டத்தில் பெரிய அளவில் மணல் கொள்ளை நடந்தும் அதிகாரிகள் மவுனம் காப்பது ஏன்; மணல் கடத்தல் உடனடியாக தடுக்கப்பட வேண்டும். அவர்கள் என்ன தங்கமா திருடுகிறார்கள்; துப்பு கிடைக்காமல் இருப்பதற்கு.

இத்தனை வண்டிகள் மணலை ஏற்றிக்கொண்டு ஆற்றை கடந்து செல்வது, உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா. மணல் கொள்ளை குறித்த வீடியோ என்னிடமே உள்ளது.

ஆனால், உங்களிடம் இல்லையா. உங்களால் முடிந்ததை பாருங்கள். இல்லையெனில், நானே பார்த்துக் கொள்வேன். இதற்கு மேலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், உங்கள் மீது நான் நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us