/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சர்க்கரை ஆலைகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை
/
சர்க்கரை ஆலைகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை
ADDED : ஜன 30, 2026 06:34 AM
பெங்களூரு: சட்டசபை கேள்வி நேரத்தில், நேற்று நடந்த விவாதம்:
பா.ஜ., - ஹரிஷ்: விஜயநகரா மாவட்டம், ஹரப்பனஹள்ளி தாலுகாவின் துக்காவதி உட்பட பல்வேறு கிராமங்களில் உள்ள சர்க்கரை ஆலைகள், சாம்சன் டிஸ்லரீஸ் தொழிற்சாலைகளி ன் கழிவு நீரை சுத்திகரிக்காமல், ஹரிஹராவின் ஹத்தினகிடகஹள்ளா கால்வாயில் திறந்து விடப்படுகிறது. கால்வாயில் கழிவு நீர் கலப்பதால், திட்டப்பணிகளுக்கு தொந்தரவு ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே: விஜயநகரா, ஹரப்பனஹள்ளியின், துக்காவதி கிராமத்தில், ஷாமனுார் சுகர் லிமிடெட் மற்றும் இந்தியன் கேன் பவர் லிமிடெட் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவைகளால் நீர் நிலைகள் அசுத்தமடைவது குறித்து, எழுத்து பூர்வமாக புகார் வரவில்லை.
அதிகாரிகள் சர்க்கரை ஆலைகளை நேரில் ஆய்வு செய்தனர். ஷாமனுார் சுகர் ஆலையில், கரும்பு பிழிவது முடிந்துள்ளதால், தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சாம்சன் டிஸ்லரீஸ் ஆலை செயல்படுகிறது. இந்த ஆலையில் இருந்து கழிவு நீர், நீரோடையில் கலக்கப்படுகிறது. இது குறித்து அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.
ஆலை தவறு செய்திருப்பது உறுதியானால், நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும், சர்க்கரை ஆலைகள் மீது தயவு தாட்சண்யம் இன்றி, நடவடிக்கை எடுக்கப்படும்.

