/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அரசு பஸ்சில் அமைச்சர் பயணம்; புத்தகம் கொடுத்து வரவேற்பு
/
அரசு பஸ்சில் அமைச்சர் பயணம்; புத்தகம் கொடுத்து வரவேற்பு
அரசு பஸ்சில் அமைச்சர் பயணம்; புத்தகம் கொடுத்து வரவேற்பு
அரசு பஸ்சில் அமைச்சர் பயணம்; புத்தகம் கொடுத்து வரவேற்பு
ADDED : ஏப் 13, 2025 07:24 AM

விஜயபுரா : மாநில வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா, பணி நிமித்தமாக, விஜயபுராவுக்கு அரசு பஸ்சில் பயணம் செய்தார்.
மாநில வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா, மற்ற அமைச்சர்களை போன்று இல்லாமல், எளிமையான குணம் கொண்டவர். இவர் பொறுப்பேற்ற பின், துறையில் பல மாறுதல்களை கொண்டு வந்தார்.
அவ்வப்போது வருவாய்த்துறை அலுவலகங்களுக்கு, திடீரென சென்று அதிகாரிகள், ஊழியர்களின் பணித்திறனை சோதிக்கிறார்.
அலுவலகங்களில் இடைத்தரகர்கள் தலையீட்டை கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுத்தார். துறை பணிகளை முடுக்கிவிட்டார்.
பொதுவாக அமைச்சர்கள், வெளியூர்களுக்கு செல்வதற்கு கார், விமானம் அல்லது ஹெலிகாப்டரிலோ பயணம் செய்வது வழக்கம்.
ஆனால் கிருஷ்ண பைரேகவுடா, அரசு பஸ்களில் செல்கிறார். சாதாரண மக்களை போன்று, மெட்ரோ ரயிலில் பயணம் செய்கிறார்.
துறை பணி நிமித்தமாக, இவர் விஜயபுராவுக்கு செல்ல வேண்டியிருந்தது. நேற்று முன் தினம் பெங்களூரில் இருந்து, கே.எஸ்.ஆர்.டி.சி.,யின் 'கல்யாண ரதம்' பஸ்சில் புறப்பட்டார். நேற்று காலை விஜயபுராவுக்கு வந்திறங்கினார். அவருக்கு உள்ளூர் தலைவர்கள் புத்தகம் கொடுத்து வரவேற்றனர்.

