/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மருத்துவ கல்லுாரி கேட்டு அமைச்சர் வீடு முற்றுகை
/
மருத்துவ கல்லுாரி கேட்டு அமைச்சர் வீடு முற்றுகை
ADDED : ஜன 02, 2026 06:08 AM

விஜயபுரா: விஜயபுராவில், மருத்துவ கல்லுாரி அமைக்க கோரி, அமைச்சர் எம்.பி.பாட்டீல் வீட்டை முற்றுகையிட முயன்ற, மடாதிபதி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
விஜயபுராவில், அரசு சார்பில் மருத்துவ கல்லுாரி அமைக்க கோரி,பசவனபாகேவாடியில் உள்ள பி.பி.ஹுலஷ்யா மடத்தின் மடாதிபதி பசவசுவாமி தலைமையில் நேற்று போராட்டம் நடந்தது.
விஜயபுரா - சோலாப்பூர் சாலையில் உள்ள, கர்நாடக தொழில் துறை அமைச்சரும், விஜயபுரா மாவட்ட பொறுப்பு அமைச்சருமான எம்.பி.பாட்டீல் வீட்டை முற்றுகையிட, மடாதிபதி தலைமையில் போராட்டக்காரர்கள் ஊர்வலமாக சென்றனர். அமைச்சர் வீட்டிற்கு சிறிது துாரத்திற்கு முன்பே, இரும்பு தடுப்புகள் வைத்து போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். தடுப்புகளை தள்ளி கொண்டு செல்ல முயன்ற போது தடுக்கப்பட்டனர்.
மடாதிபதியின் போனை, மப்டியில் இருந்த போலீஸ்காரர்கள் பறிக்க முயன்றனர். கோபம் அடைந்த மடாதிபதி எஸ்.ஐ., ஒருவரை கன்னத்தில் அறைந்தார். பின், மடாதிபதி உள்ளிட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

