/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஹெப்பால் மேம்பாலத்தின் 2வது இணைப்பு பாலம் திறப்பு
/
ஹெப்பால் மேம்பாலத்தின் 2வது இணைப்பு பாலம் திறப்பு
ஹெப்பால் மேம்பாலத்தின் 2வது இணைப்பு பாலம் திறப்பு
ஹெப்பால் மேம்பாலத்தின் 2வது இணைப்பு பாலம் திறப்பு
ADDED : ஜன 02, 2026 06:08 AM

பெங்களூரு: ஹெப்பால் மேம்பாலத்தின் புதிதாக கட்டப்பட்ட இரண்டாவது இணைப்பு பாலத்தை, துணை முதல்வர் சிவகுமார் நேற்று திறந்து வைத்தார்.
பெங்களூரு நகரின் ஹெப்பால் மேம்பாலத்தில் ஏற்படும், போக்குவரத்து நெரிசலை குறைக்க, பி.டி.ஏ., எனும் பெங்களூரு வளர்ச்சி ஆணையம் சார்பில், மேம்பாலத்தை ஒட்டி, இரண்டு புதிய இணைப்பு பாலங்கள் கட்டப்பட்டன.
முதல் பாலம் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. இரண்டாவது இணைப்பு பாலத்தை, துணை முதல்வர் சிவகுமார், நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பைரதி சுரேஷ், பி.டி.ஏ., தலைவர் ஹாரிஸ், பி.டி.ஏ., கமிஷனர் மணிவண்ணன் உள்ளிட்டோர் நேற்று திறந்து வைத்தனர்.
50வது ஆண்டு பின், சிவகுமார் அளித்த பேட்டி:
ஹெப்பால் மேம்பாலத்தின் இரண்டாவது புதிய இணைப்பு பாலம் விமான நிலையம், துமகூரு ரோடு, எலஹங்கா, ஜக்கூர், சகஹாரா நகரில் இருந்து வரும் வாகனங்கள் எளிதில் மேக்ரி சதுக்கத்தை அடைய உதவும்.
பி.டி.ஏ., 50 வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நேரத்தில், வரலாற்று சிறப்புமிக்க பல திட்டங்களை செய்து வருகிறது. 120 கி.மீ., துாரத்தில் அமைய உள்ள பெங்களூரு வணிக வழிதடம் திட்டத்தை செயல்படுத்த, விவசாயிகளிடம் இருந்து நிலம் கையகப்படுத்தும் செயல்முறை துவங்கி உள்ளது.
துமகூரு ரோட்டில் இருந்து கே.ஆர்.புரம் வரை வெளிவட்ட சுற்றுச்சாலை அமைக்க திட்டமிட்டு உள்ளோம்.
கர்நாடக தொழில் பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் நிலம், நைஸ் நிறுவனத்திடம் உள்ளது. அந்த நிலத்தை திரும்ப பெற நாங்கள் முடிவு செய்தோம். இதற்கு நைஸ் நிறுவனம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. அரசை விட பெரியவர்கள் என்று அவர்கள் நினைக்கின்றனர். அவர்களுக்கு எப்படி பாடம் புகட்டுவது என்று தெரியும்.
மோடி பாராட்டு எனது 35 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் பெங்களூரில் தற்போது தான் பெரிய திட்டங்களை செயல்படுத்தப்படுகின்றன. பிரதமர் மோடி, எங்கள் திட்டங்களுக்கு பாராட்டு தெரிவித்தார். மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்றாலும், பெங்களூரு நகருக்கு புதிய தோற்றம் கொடுக்க நாங்கள் முயற்சி எடுக்கிறோம்.
கிரேட்டர் பெங்களூரு ஆணையம் உட்பட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும், இந்த ஆண்டு தேர்தல் நடக்கும். எந்த அசம்பாவித சம்பவங்களும் இன்றி ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து உள்ளது. இதற்காக உள்துறை அமைச்சர் பரமேஸ்வருக்கும், போலீஸ் துறைக்கும் எனது பாராட்டுகள்.
இவ்வாறு அவர்கூறினார்.

