/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நெட்டிசனை திட்டிய அமைச்சர்; பதிவு 'ஹேக்' செய்யப்பட்டதாக விளக்கம்
/
நெட்டிசனை திட்டிய அமைச்சர்; பதிவு 'ஹேக்' செய்யப்பட்டதாக விளக்கம்
நெட்டிசனை திட்டிய அமைச்சர்; பதிவு 'ஹேக்' செய்யப்பட்டதாக விளக்கம்
நெட்டிசனை திட்டிய அமைச்சர்; பதிவு 'ஹேக்' செய்யப்பட்டதாக விளக்கம்
ADDED : மார் 26, 2025 06:21 AM

பெங்களூரு : நெட்டிசன் பதிலுக்கு மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி, அமைச்சர் பைரதி சுரேஷ் பதிவிட்டதாக, சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, 'எனது முகநுால் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது' என்று விளக்கம் அளித்துள்ளார்.
நகர வளர்ச்சி துறை அமைச்சர் பைரதி சுரேஷ். இவர், சமூக வலைதளங்களில் 'ஆக்டிவாக' உள்ளார். பல்வேறு மக்கள் நல திட்டங்கள் உட்பட நிகழ்வுகளை, தனது முகநுால் பக்கத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்து வருகிறார்.
கோடை காலத்தை ஒட்டி, பொது மக்களுக்கு இலவசமாக தண்ணீர் டேங்கர் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதற்கு கார்த்திக் என்பவர், 'இது அனைத்தும் நாடகம்; மக்கள் முட்டாள்கள்' என்று பதிவிட்டிருந்தார்.
பைரதி பசவராஜ், அந்த நபரை ஆபாசமாக திட்டி பதிவேற்றம் செய்திருந்தார்.
இதற்கு கார்த்திக், 'முதலில் உங்கள் பெற்றோரை மதிக்க கற்று கொள்ளுங்கள். இதுபோன்று ஆபாசமான வார்த்தைகளை மக்கள் பிரதிநிதி பயன்படுத்துவது சரியல்ல. நான் சொன்னது உண்மை தான். உங்களை தேர்ந்தெடுத்த மக்கள் முட்டாள்கள்' என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவுகள், 'ஸ்கிரீன் ஷாட்' எடுக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது. இதையடுத்து, அமைச்சரின் பதிவு 'டெலிட்' செய்யப்பட்டது.
இதற்கு அமைச்சர் கூறுகையில், 'எனது முகநுால் கணக்கை யாரோ ஹேக் செய்துள்ளனர். இதுபோன்ற செய்திகளால் யாரும் தவறாக உணர வேண்டாம்' என்று கேட்டு கொண்டார்.
ஆர்.டி.நகர் போலீசில் நிலையத்திலும், அமைச்சர் சார்பில் புகார் செய்யப்பட்டு உள்ளது.