அமைச்சர் ஜமீர் அகமதுகான், ரமேஷ்குமார் பொன்னண்ணா முதல்வருடன் சந்திப்பு
அமைச்சர் ஜமீர் அகமதுகான், ரமேஷ்குமார் பொன்னண்ணா முதல்வருடன் சந்திப்பு
ADDED : செப் 02, 2026 11:04 PM
பெங்களூரு: முதல்வர் சிவகுமாரை, அமைச்சர் ஜமீர் அகமதுகான், நேற்று சந்தித்து பேசினார். இவருடன் முன்னாள் எம்.எல்.ஏ., ரமேஷ்குமாரும், முதல்வரின் அரசியல் செயலர் பொன்னண்ணாவும் சென்றிருந்தனர்.
அமைச்சர் ஜமீர் அகமது, ரமேஷ்குமார் மற்றும் பொன்னண்ணா ஆகிய மூவரும், நேற்று காலை முதல்வர் சிவகுமாரை, அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
அவருடன், 20 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர்.
அதன்பின் மூவரும் வெளியே வந்து, சிறிது நேரம் ஆலோசனை நடத்தினர். முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கமான ராஜண்ணா, நேற்று முன்தினம் முதல்வர் சிவகுமாரை சந்தித்து, நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடை யே ஜமீர் அகமதுகான், ரமேஷ்குமார், பொன்னண்ணாவும், முதல்வரை சந்தித்தது, அரசியல் வட் டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதல்வரை சந்தித்து விட்டு, வெளியே வந்த அமைச்சர் ஜமீர் அகமதுகானிடம், ஊ டகத்தினர் கேள்விகள் கேட்டனர். ஆனால், அவர் பதிலளிக்க மறுத்து, அங்கிருந்து சென்றுவிட்டார் .
