sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஏப்ரல் 06, 2026 ,பங்குனி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

 காணாமல் போனதாக தேடப்பட்ட பெண் எஸ்.ஐ., கண்டுபிடிப்பு 

/

 காணாமல் போனதாக தேடப்பட்ட பெண் எஸ்.ஐ., கண்டுபிடிப்பு 

 காணாமல் போனதாக தேடப்பட்ட பெண் எஸ்.ஐ., கண்டுபிடிப்பு 

 காணாமல் போனதாக தேடப்பட்ட பெண் எஸ்.ஐ., கண்டுபிடிப்பு 


PUBLISHED ON : ஏப் 05, 2026 04:28 AM

Google News

PUBLISHED ON : ஏப் 05, 2026 04:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துமகூரு: கா ணாமல் போனதாக தேடப்பட்ட பெண் எஸ்.ஐ., உறவினர் வீட்டில் கண்டு பிடிக்கப்பட்டார் .

துமகூரு டவுன் நியூ லே - அவுட் போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐ.,யாக பணியாற்றுபவர் மங்களம்மா, 50. நேற்று முன்தினம் மாலை டி.எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றார்.

பின், வீட்டிற்கு சென்ற அவர் சீருடையை கழற்றி வீட்டில் வைத்து விட்டு, சாதாரணை உடை அணிந்து வெளியே புறப்பட்டார்.

இரவில் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடினர். மொபைல் போனும் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது.

மங்களம்மாவை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால், அவரது மகள் போலீசில் புகார் செய்தார். 'காணாமல் போன அம்மாவை கண்டுபிடித்து கொடுங்கள்' என, கண்ணீர் விட்டு அழுதார்.

கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை, போலீசார் ஆய்வு செய்த போது, வீட்டில் இருந்து புறப்பட்ட மங்களம்மா, பஸ் நிலையத்திற்கு சென்று, சிக்கமகளூரு செல்லும் பஸ்சில் ஏறிச் சென்றது தெரிய வந்தது.

நேற்று காலை சிக்கமகளூரு சென்ற போலீசார், உறவினர் வீட்டில் இருந்த மங்களம்மாவை கண்டுபிடித்தனர். மகளுக்கு விவாகரத்து ஆனதாலும், குடும்ப பிரச்னையாலும் மனஉளைச்சலால், உறவினர் வீட்டிற்கு வந்ததாக மங்களம்மா கூறினார். பின் அவர், துமகூருக்கு அழைத்து வரப்பட்டார்.






      Dinamalar
      Follow us