ADDED : ஏப் 27, 2025 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாவணகெரே தாவணகெரே மாவட்டம், ஹொன்னாளி தாலுகாவின், மலே பென்னுார் கிராமத்தில் வசிப்பவர் சவிதா. இவர் இம்மாதம் 24ம் தேதியன்று, தன் ஐந்து வயது மகளுடன் ஹொன்னாளி பஸ் நிலையத்துக்கு வந்திருந்தார்; திடீரென மகளை காணவில்லை.
தேடுதல் வேட்டையில் ஹாவேரியின், ரட்டிஹள்ளியின், மாசூர் கிராமத்தின் அருகில் செல்லும் கே.எஸ்.ஆர்,டி.சி., பஸ்சில் சிறுமி இருப்பது தெரிந்தது.
உடனடியாக அந்த பஸ்சின் நடத்துநரை தொடர்பு கொன்டு, தகவல் கூறினர். அதன்பின் அங்கு சென்ற போலீசார், சிறுமியை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்.

