/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,வுக்கு மிரட்டல் விடுத்த மணல் மாபியா கும்பல் ஓட்டம்
/
ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,வுக்கு மிரட்டல் விடுத்த மணல் மாபியா கும்பல் ஓட்டம்
ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,வுக்கு மிரட்டல் விடுத்த மணல் மாபியா கும்பல் ஓட்டம்
ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,வுக்கு மிரட்டல் விடுத்த மணல் மாபியா கும்பல் ஓட்டம்
ADDED : ஜன 21, 2026 07:21 AM

ராய்ச்சூர்: சட்டவிரோதமாக ம ணல் அள்ளுவதற்கு ம.ஜ.த., - எம்.எல்.ஏ., கரேம்மா நாயக் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரது வீட்டுக்கு வந்த மணல் மாபியா கும்பல் மிரட்டல் விடுத்தது.
ராய்ச்சூர் மாவட்டம் தேவதுர்கா தொகுதி ம.ஜ.த., - எம்.எல்.ஏ., கரேம்மா நாயக். அவரது தொகுதியில் உள்ள கிருஷ்ணா நதிக்கரையில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதை எதிர்த்து நடவடிக்கை எடுத்து வருகிறார். இது குறித்து, தேவதுர்கா போலீசில் சமீபத்தில் புகார் அளித்தார். போலீசாரின் சோதனையில் சட்டவிரோதமாக மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட பொக்லைன், டிப்பர் லாரி, டிராக்டர் உட்பட ஏழு வாகனங்களை கடந்த 18ம் தேதி பறிமுதல் செய்தனர். 60க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இச்சம்பவத்தால், சட்டவிரோத மணல் மாபியா கும்பல் எரிச்சல் அடைந்தது. ஆத்திரம் அடைந்த அகும்பல், நேற்று முன்தினம் எம்.எல்.ஏ., வீட்டுக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மணல் அள்ளுவதை நிறுத்தக்கூடாது; உங்கள் வீட்டிலுள்ள வாகனங்களும் காணாமல் போய் விடும் என பகிரங்க மிரட்டல் விடுத்தனர்.
இச்சம்பவம் எம்.எல்.ஏ., கரேம்மாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக, மாவட்ட எஸ்.பி., புட்டமாதையாவிடம் புகார் செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து, எம்.எல்.ஏ., கூறியதாவது:
ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதற்கு நான் ஆதரவு அளிக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த ஒரு கும்பல் என் வீட்டுக்கே வந்து மிரட்டி விட்டு சென்று உள்ளது. எம்.எல்.ஏ.,வுக்கே மிரட்டல் வந்தால், சாதாரண மக்களின் நிலையை யோசித்து கூட பார்க்க முடியவில்லை. போலீசாரின் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக காத்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

