/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஜெயின் கோவிலில் திருட்டு வெள்ளி பொருட்களை துாக்க முடியாமல் பணத்துடன் ஓட்டம்

ADDED : ஜன 21, 2026 07:19 AM
தார்வாட்: திருடுவதற்காக ஜெயின் கோவிலில் நுழைந்த மர்ம நபர், வெள்ளி பொருட்களை பையில் கட்டி துாக்க முடியாததால், பணத்தை மட்டும் எடுத்து கொண்டு ஓட்டம் பிடித்தார்.
தார்வாட் நகரின் லைன் பஜாரில் ஜெயின் கோவில் உள்ளது. நேற்று முன் தினம் நள்ளிரவு, ஒரு மர்ம நபர், அங்கு வந்தார். கோவில் முன்பாக இருந்த கண்காணிப்பு கேமராவின் கேபிள்களை துண்டித்தார். அதன்பின் பூட்டை உடைத்து, கோவிலுக்குள் நுழைந்தார்.
அங்கிருந்த ௭ லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி பொருட்களையும், உண்டியலை உடைத்து, அதில் இருந்த ௫ லட்சம் ரூபாயையும் பெரிய பையில் போட்டார்.
கடவுள் விக்ரகம் மீது தங்கநகைகள் இருந்தன. அதை தொடவில்லை. பையை துாக்க முயற்சித்த போது, அதிக பாரமாக இருந்தது. எனவே அதை அங்கேயே போட்டு விட்டு, பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு தப்பியோடினார்.
நேற்று காலையில் அர்ச்சகர் பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்தார். அப்போது, கதவு திறந்து கிடந்ததையும், பொருட்கள் சிதறி காணப்பட்டதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கோவில் நிர்வாகிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.
சஹரா போலீசார் அங்கு வந்து பார்வையிட்டனர். திருடனை தேடுகின்றனர்.