ம.ஜ.த., - காங்., நிர்வாகிகள் விஜயபுரா பா.ஜ.,வில் ஐக்கியம்
ம.ஜ.த., - காங்., நிர்வாகிகள் விஜயபுரா பா.ஜ.,வில் ஐக்கியம்
ADDED : மார் 30, 2026 04:39 AM

தேவனஹள்ளி: தேவனஹள்ளியின் விஜயபுரா நகர பிரிவு தலைவர் வெங்கடேஷ் முன்னிலையில், விஜயபுரா ஐந்தாவது வார்டின் ம.ஜ.த., காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த பலர் பா.ஜ.-வில் இணைந்தனர்.
விஜயபுரா நகர பா.ஜ., தலைவர் வெங்கடேஷ் பேசுகையில், ''மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி பா.ஜ., அரசு, நிலையான நிர்வாகத்தை நடத்தி வருகிறது.தேவனஹள்ளி தாலுகாவில் உள்ள வாக்காளர்கள் ஒரு மாற்றத்தை விரும்புகின்றனர். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களில் பா.ஜ.,வுக்கு சிறப்பான வெற்றி கிடைக்கும்.
''ஏழை, எளியோர், ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகப் பாடுபடும் விழிப்புணர்வுமிக்க சமூகத்தை உருவாக்கும் வகையில், மக்கள் நலத் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்துவதில் பா.ஜ. வெற்றிக் கண்டுள்ளது. தேவனஹள்ளி தாலுகாவில் பா.ஜ.,வில் இணைய விரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது,'' என்றார்.
பா.ஜ., தாலுகா துணைத் தலைவர் ராமு பகவான், பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் முன்னாள் மாவட்டத் தலைவர் கனகராஜு, மஞ்சுநாத், முனிராஜு, சிவு, ரக் ஷிதா, சந்திரசேகர், முத்து, சுப்ரீத், முனிகிருஷ்ணா, வெங்கடேஷ், பசவா, 'புல்லட்' ராமச்சந்திரப்பா, ஷில்பா அஜித், முத்துராஜ், ரிக் ஷத் உட்பட பலர் பங்கேற்றனர்.
