sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் ம.ஜ.த., - எம்.எல்.ஏ., வழக்கு

/

நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் ம.ஜ.த., - எம்.எல்.ஏ., வழக்கு

நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் ம.ஜ.த., - எம்.எல்.ஏ., வழக்கு

நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் ம.ஜ.த., - எம்.எல்.ஏ., வழக்கு


ADDED : அக் 15, 2025 02:24 AM

Google News

ADDED : அக் 15, 2025 02:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: அரசுக்கு எதிராக, சீனிவாசப்பூர் தொகுதி ம.ஜ.த., - எம்.எல்.ஏ., வெங்கட் சிவா ரெட்டி, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ரிட் மனுவில் அவர் கூறியுள்ளதாவது:

சீனிவாசப்பூர் தொகுதிக்கு தேவையான நிதி வழங்குமாறு அரசிடம் பலமுறை முறையிட்டேன். அரசு நிதி ஒதுக்கியுள்ள விபரங்களை வெளியிடவில்லை. பாரபட்சம் காட்டுகின்றனர்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களின் தொகுதி மேம்பாட்டுக்கு மட்டும் தலா 50 கோடி ரூபாயை விடுவித்த அரசு, ம.ஜ.த., - பா.ஜ.., எம்.எல்.ஏ.,க்கள் உள்ள தொகுதிகளுக்கு அத்தகைய நிதியை வழங்கவில்லை.

பலமுறை கோரிக்கை விடுத்தும் நிதியை வெளியிடாமல் அரசியலமைப்பின் 14வது பிரிவின் சமத்துவக் கொள்கையை மீறியுள்ளனர்.

ம.ஜ.த., - பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களின் தொகுதிகளுக்கு நிதி வழங்குவதில்லை என்று சட்டசபை கூட்டத் தொடரிலும் வலியுறுத்தி உள்ளேன். எனவே, சீனிவாசப்பூர் தொகுதிக்கு நிதி ஒதுக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us