தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ எம்.எல்.ஏ.,வுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய ம.ஜ.த., - எம்.எல்.சி., வலியுறுத்தல்

 எம்.எல்.ஏ.,வுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய ம.ஜ.த., - எம்.எல்.சி., வலியுறுத்தல்

 எம்.எல்.ஏ.,வுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய ம.ஜ.த., - எம்.எல்.சி., வலியுறுத்தல்


ADDED : ஜன 22, 2026 05:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2026 05:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''தேவதுர்கா ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,வுக்கு மிரட்டல் விடுத்த மணல் கடத்தல்காரர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்,'' என, மேல்சபை ம.ஜ.த., - எம்.எல்.சி., --- டி.ஏ.ஷ்ரவணா வலியுறுத்தினார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

தேவதுர்கா ம.ஜ.த., - எம்.எல்.ஏ., கரேம்மா நாயக்கிற்கு மிரட்டல் விடுத்த மணல் மாபியாக்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். மாபியாக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், ரவுடிகளுக்கு ஆதரவாக செயல்படும் போலீசாரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும். மணல் கடத்தலை தடுக்க, புதிய சிறப்பு படை அமைக்க வேண்டும்.

மாநில காங்கிரஸ் அரசின் கட்டுப்பட்டில் அதிகாரிகள் இல்லை. இதனால், ரவுடியிசம் வளர்ந்து வருகிறது. இந்த அரசு, மாநிலத்தை ரவுடி ராஜ்ஜியமாக மாற்றி விட்டது.

எம்.எல்.ஏ., கரேம்மா நாயக், முற்போக்கான, மக்கள் நலன் சார்பில் உறுப்பினராவார். அவர் எப்போதும் மக்களின் நலனுக்காக உழைக்கும் உறுப்பினர். அவருக்கே பாதுகாப்பு இல்லாத போது, மாநிலத்தில் அரசு உள்ளதா என்று கேள்வி எழுந்து உள்ளது.

கிருஷ்ணா நதியில் போலீசார் முன்னிலையில், எம்.எல்.ஏ.,வை மணல் மாபியாக்கள் மிரட்டி உள்ளனர். அவரின் வீட்டின் அருகே கூடிய மாபியாக்கள், 'மீண்டும் மணல் தொழிலை நிறுத்த முயன்றால் தீர்த்து விடுவோம்' என்று வெளிப்படையாக, அவருக்கு மிரட்டல் விடுத்தது அதிர்ச்சி அளிக்கிறது.

எம்.எல்.ஏ.,வையே ஒரு கும்பல் மிரட்டுகிறது என்றால், ஒட்டு மொத்த நிர்வாகமும் சீர்குலைந்து விட்டது என்றே அர்த்தம். மாபியாக்களின் பாதுகாவலர்களாக போலீசார் நடந்து கொள்கின்றனர். புகார் அளித்த பின்னரும், எம்.எல்.ஏ.,வை மிரட்டியவர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை.

கண்ணுக்கு தெரியாத கைகள், மணல் மாபியாக்களுக்கு பாதுகாப்பாக உள்ளன. அவர்களின் கைப்பாவையாக போலீசார் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us