பாரம்பரிய குமாரகிருபா இல்லத்தை மாற்ற கூடாது என்கிறது ம.ஜ.த.,
பாரம்பரிய குமாரகிருபா இல்லத்தை மாற்ற கூடாது என்கிறது ம.ஜ.த.,
ADDED : ஜூன் 12, 2026 10:43 PM

பெங்களூரு: பெங்களூரின் வரலாற்று பிரசித்தி பெற்ற, 160 ஆண்டுகள் பழமையான குமாரகிருபா விருந்தினர் இல்லத்தை, தன் அலுவலக இல்லமாக மாற்ற, முதல்வர் சிவகுமார் திட்டமிட்டுள்ளார்.
ஜோதி டம் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தை அதிகமாக நம்பும் சிவகுமார், குமாரகிருபா விருந்தினர் இல்லத்தின் உள் வளாகம், ஜோதிடரின் ஆலோசனைப்படி, வாஸ்து முறைப்படி மாற்றப்படுகிறது.
பொதுப்பணித்துறை ஏற்கனவே கட்டடத்தை புதுப்பிக்கும் பணியை துவக்கியுள்ளது. பாரம்பரிய கட்டடத்தை மாற்றுவதற்கு, ம.ஜ.த., அதிருப்தி தெரிவித்துள்ளது.
இது குறித்து, ம.ஜ.த., நேற்று கூறியதாவது:
பாரம்பரிய கட்டடத்துக்கு, பாதிப்பு ஏற்படும் வகையில், மாநில அரசு நடந்து கொள்கிறது. மகாத்மாகாந்தி நடந்த இடத்தில், தற்போது சிவகுமார் அகங்காரத்துடன் நடக்கிறார். மாநிலத்தில் முதல்வர்கள் வசிக்க, காவேரி, அனுகிரஹா போன்ற அழகான கட்டடங்கள் இருந்தும், வரலாற்று பிரசித்தி பெற்ற குமாரகிருபா விருந்தினர் இல்லத்தை, இடித்து மாற்றுவது கண்டிக்கத்தக்கது. இது, முட்டாள்தனத்தின் வெளிப்பாடு.
மகாத்மாகாந்தி தங்கியிருந்த, திவான் சேஷாத்ரி அய்யரை நினைவு கூறும் குமாரகிருபா கட்டடத்தை, தனிப்பட்ட நோக்கத்துக்கு, அலுவலக இல்லமாக மாற்றுவது, வரலாற்றுக்கு செய்யும் துரோகமாகும்.
குமாரகிருபா யாருடை ய தனிப்பட்ட சொத்தும் அல்ல. அது, வரலாற்றின் பெருமைக்குரிய அடையாளம். பாரம்பரிய கட்டடத்தை பாதுகாக்க வேண்டியவர்களே, அதை அழிக்க நினைப்பது துரதிருஷ்டவசமானதாகும். உடனடியாக, புதுப்பிப்பு பணிகளை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
