தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ம.ஜ.த.,வில் ஹூடி விஜயகுமார் மாலுார் அரசியலில் பரபரப்பு

 ம.ஜ.த.,வில் ஹூடி விஜயகுமார் மாலுார் அரசியலில் பரபரப்பு

 ம.ஜ.த.,வில் ஹூடி விஜயகுமார் மாலுார் அரசியலில் பரபரப்பு


ADDED : மார் 04, 2026 05:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2026 05:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்வாபிமானி ஜனதா கட்சி தலைவர் ஹூடி விஜயகுமார், ம.ஜ.த.,வில் இணைய உள்ளதால், மாலுார் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கோலார் மாவட்டம் மாலுாரை சேர்ந்தவர் ஹூடி விஜயகுமார். 'ஸ்வாபிமானி' ஜனதா கட்சி தலைவரான இவர், பா.ஜ.,வுக்கு ஆதரவாக உள்ளார். 2023 தேர்தலில் மாலுாரில் போட்டியிட பா.ஜ.,வில், 'சீட்' எதிர்பார்த்தார். ஆனால், ம.ஜ.த.,வில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ., மஞ்சுநாத் கவுடாவுக்கு சீட் கிடைத்து விட்டது.

இதனால், ஹூடி விஜயகுமார் சுயேச்சையாக போட்டியிட்டு, பா.ஜ.,வின் ஓட்டுகளை பிரித்தார். இதன் விளைவாக காங்கிரசின் நஞ்சேகவுடா, 248 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இரண்டாவது முறை எம்.எல்.ஏ., ஆனார்.

இந்நிலையில், 2028 சட்டசபை தேர்தலை கருத்தில் கொ ண்டு, ஹூடி விஜயகுமார், ம.ஜ.த.,வில் இணைய உள்ளார். கோலார் ம.ஜ.த., - எம்.பி., மல்லேஸ் பாபுவுடன் ஆலோசனை நடத்திய அவர், கட்சியின் தலை வர் குமாரசாமியையும் ரகசியமாக சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. நாளை அவர் ம.ஜ.த.,வில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஹூடி விஜயகுமாரை, குமாரசாமி தன் கட்சியில் சேர்த்துக் கொண்டால், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணியில் விரிசல் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.

இதுகுறித்து மாலுார் பா.ஜ., பிரமுகர் மஞ்சுநாத் கவுடா கூறியதாவது:

கோலார் அரசியலில், காங்கிரசும், ம.ஜ.த.,வும் கூட்டணி அமைத்து பா.ஜ.,வை அழிக்க பார்க்கின்றன. அவர்களது அரசியல் நாடகம் சரியல்ல. ஹூடி விஜயகுமாரை, ம.ஜ.த.,வில் இணைப்பது நாடகத்தின் இரண்டாம் பகுதி.

மாலுாரில் நஞ்சேவுடாவை மூன்றாவது முறையாக வெற்றி பெற வைக்க பார்க்கின்றனர். கடந்த தேர்தலில் ம.ஜ.த., வேண்டும் என்றே வேட்பாளரை இறக்கியது. முறைகேடு செய்யும் நஞ்சேகவுடாவுக்கு, மத்திய அமைச்சர் குமாரசாமியின் ஆதரவு உள்ளது. கோலார் மாவட்ட அரசியலில் நடக்கும் சூழ்ச்சி பற்றி, பா.ஜ., மேலிடத்திற்கு நன்கு தெரியும். சூழ்ச்சிகளை எதிர்கொள்ள நானும் தயாராக உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோலார் மாவட்ட ம.ஜ.த., தலைவர் ராமேகவுடா கூறுகையில், ''2028 தேர்தலில் மாலுார் தொகுதியில் ம.ஜ.த., போட்டியிடும். பா.ஜ.,வை விட எங்களுக்கு செல்வாக்கு அதிகம்,'' என்றார்.

- நமது நிருபர் -:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us