/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எம்.எல்.ஏ., ஹரிஷ் பூஞ்சா வழக்கு 20க்கு ஒத்திவைப்பு
/
எம்.எல்.ஏ., ஹரிஷ் பூஞ்சா வழக்கு 20க்கு ஒத்திவைப்பு
எம்.எல்.ஏ., ஹரிஷ் பூஞ்சா வழக்கு 20க்கு ஒத்திவைப்பு
எம்.எல்.ஏ., ஹரிஷ் பூஞ்சா வழக்கு 20க்கு ஒத்திவைப்பு
ADDED : மே 09, 2025 12:48 AM

பெங்களூரு: தட்சிண கன்னடா மாவட்டம், பத்ரபைலுவில் மே 3ம் தேதி ஸ்ரீகோபால கிருஷ்ணா கோவில் பிரம்ம கலா உத்சவம் நடந்தது. அப்போது பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹரிஷ் பூஞ்சா, வகுப்புவாத பிரச்னையை துாண்டும் வகையில் பேசினார் என்று, உப்பனங்கடி போலீசில், இப்ராஹிம் என்பவர் புகார் அளித்திருந்தார். போலீசாரும் வழக்கு பதிவு செய்தனர்.
தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யும்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஹரிஷ் பூஞ்சா மனு தாக்கல் செய்திருந்தார்.
நீதிபதி ஸ்ரீஷனானந்தா முன் விசாரணைக்கு வந்தது. 'இம்மனு தொடர்பாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அனுமதி கேட்டு, விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்' என்று கூறி, நேற்றைக்கு ஒத்தி வைத்திருந்தார்.
நேற்று காலை இம்மனு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பு வக்கீல் வாதிடுகையில், 'மனுதாரர் மீது பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர்., நகல் கேட்கப்பட்டு உள்ளது' என்றார்.
இதற்கு அரசு தரப்பு வக்கீல், 'போலீஸ் நிலையத்தில் எப்.ஐ.ஆர்., நகலை சமர்ப்பிக்க அவகாசம் வேண்டும்' என்று கேட்டார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, 'மாநில அரசுக்கும், புகார்தாரருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையை, வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

