தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ என் தொகுதிக்கு 5 ரூபாய் கூட தரவில்லை எம்.எல்.ஏ., இக்பால் ஹுசேன் வருத்தம்

 என் தொகுதிக்கு 5 ரூபாய் கூட தரவில்லை எம்.எல்.ஏ., இக்பால் ஹுசேன் வருத்தம்

 என் தொகுதிக்கு 5 ரூபாய் கூட தரவில்லை எம்.எல்.ஏ., இக்பால் ஹுசேன் வருத்தம்


ADDED : மார் 15, 2026 06:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2026 06:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராம்நகர்: ''முதல்வர் சித்தராமையா என் தொகுதிக்கு, குறைந்தபட்சம் ஐந்து ரூபாயாவது கொடுத்திருக்கலாம்,'' என, ராம்நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., இக்பால் ஹுசேன் கிண்டலடித்தார்.

ராம்நகரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

என் தொகுதியின் பிரச்னைகள் பற்றி முதல்வரிடம் விவரித்தும் பலன் இல்லை. என் தொகுதி மேம்பாட்டுக்கு, 100 ரூபாய் வேண்டாம். குறைந்தபட்சம் ஐந்து ரூபாயாவது கொடுத்திருக்கலாம்.

மழை பெய்தால், பக்ஷிகெரே ஏரி உடைப்பெடுத்து, வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. போட்டோக்களுடன் நான் முதல்வருக்கு தகவல் தெரிவித்தேன். சாலைகள், சாக்கடைகள், நீர்ப்பாசன தேவைகள் தொடர்பாக, நிதியுதவி கேட்டு நான்கைந்து முறை முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்தேன்.

இதற்கு முன் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தவர், வளர்ச்சி பணிகளை செய்யவில்லை. இன்றைய முதல்வரும் எதுவும் தரவில்லை. இது, என் மனதுக்கு வருத்தம் அளிக்கிறது. இம்முறை பட்ஜெட் திருப்தி அளிக்கவில்லை. நான் என் தொகுதியை பற்றி மட்டுமே பேசுகிறேன். மற்றவர்களின் தொகுதிகள் குறித்து, நான் பேசவில்லை.

என் தொகுதி மேம்பாட்டுக்கு, நாங்கள் துணை முதல்வரின் பின்னால் தான் செல்ல வேண்டும். எங்களின் கஷ்டங்களை அவரிடம் தான் கூற வேண்டும். இதற்கு முன் அவர் மூலமாகவே, பணிகளை செய்து கொண்டேன். இனியும் அவர் மீதே சுமையை வைக்க வேண்டியுள்ளது. எங்கள் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால், அவருக்கும் பொறுப்பு உள்ளது.

என் தொகுதிக்காக நான் பேசுகிறேன். பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், வளர்ச்சி பணிகளுக்கும் நிதி கேட்டேன். கிடைக்கவில்லை என்றால், வருத்தமாக இருக்காதா.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us