ஏழைகளுக்கு வீடுகள் குலுக்கல் முறையில் வழங்க எம்.எல்.ஏ., உறுதி
ஏழைகளுக்கு வீடுகள் குலுக்கல் முறையில் வழங்க எம்.எல்.ஏ., உறுதி
UPDATED : நவ 22, 2026 12:00 AM
ADDED : நவ 21, 2026 11:18 PM

அ நிறம் | அளவு
தங்கவயல்: ‘‘தங்கவயல் மாரிகுப் பம் ராஜேஷ் கேம்ப் அருகே புதியதாக கட்டப்பட்டுள்ள வீடுகள் குலுக்கல் முறையில் வழங்கப்படும்,’’ என்று தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா தெரிவித்தார்.
‘பிரஜா சேவா அந்தோலன்’ என்ற மக்கள் சேவை இயக்கம், நேற்று தங்கவயல் சாம்பியன் ரீப் ஹைகிரவுண்டில் மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியை நடத்தியது.
நிகழ்ச்சியை துவக்கி வைத்து, ரூபகலா பேசும் போது,‘‘ வீடு தேடி திட்டங்கள் வந்தடையும். வீடற்றவர்களுக்கு மாரிகுப்பம் ராஜேஷ் கேம்ப் அருகே கட்டப் பட்டுள்ள வீடுகளை வழங்க கோரிய விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு, குலுக்கல் முறையில் வழங்கப்படும். மேலும், விண்ணப்பங்கள் பெறப்படும்,’’ என்றார்.
