தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/சிறுமியை கொன்றவருக்கு மரண தண்டனை

சிறுமியை கொன்றவருக்கு மரண தண்டனை

சிறுமியை கொன்றவருக்கு மரண தண்டனை


UPDATED : நவ 22, 2026 12:00 AM

ADDED : நவ 21, 2026 11:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 22, 2026 12:00 AM ADDED : நவ 21, 2026 11:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குடகு: திருமணத்துக்கு மறுத்த மாணவியின், தலையை வெட்டி கொலை செய்த வாலிபருக்கு, மரண தண்டனை விதித்து குடகு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

குடகு மாவட்டத்தின், சூரலப்பி கிராமத்தில் வசித்த மீனா, 16, எஸ்.எஸ்.எல்.சி., படித்தார். ஆண்டு தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார். இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த பிரகாஷ், 35, என்பவருக்கும், கடந்த 2023ல் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

சிறுமிக்கு திருமண ஏற்பாடு நடப்பதை அறிந்த போலீசார், கிராமத்துக்கு வந்து திருமணத்தை நிறுத்தினர். அதன் பின் மகளை பெற்றோர் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

அதே நாள் மாலையில் மீனாவின் வீட்டுக்கு சென்ற பிரகாஷ், பேச வேண்டும் என, பெற்றோரிடம் கூறி, அந்த சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தக்கு அழைத்து சென்றார். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தினார்.

மீனா மறுத்ததால் கோபமடைந்த பிரகாஷ், ஏற்கனவே மறைத்து வைத்திருந்த அரிவாளால், சிறுமியின் தலையை வெட்டி கொலை செய்தார். தலையை வேறு இடத்தில் வீசிவிட்டு தப்பியோடினார்.

தகவலறிந்து அங்கு வந்த போலீசார், சிறுமியின் உடலை மீட்டனர். அதன்பின் வனப்பகுதியில் இருந்த பிரகாஷை கைது செய்தனர். அவர் கைதாகியும் சிறுமியின் தலை கிடைக்கவில்லை. தீவிரமாக தேடிய போது, கொலை நடந்த சிறிது தொலைவில், தலை கண்டுபிடிக்கப் பட்டது.

தங்கையின் தலையை பார்த்து கோபமடைந்த சிறுமியின் அண்ணன் திலீப், கொலையாளி பிரகாஷை துப்பாக்கியால் சுட முயற்சித்தார். போலீசார் தலையிட்டு திலீப்பை பிடித்தனர். இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விசாரணையை முடித்த போலீசார், குடகின் மூன்றாவது கூடுதல் மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணையில் இவரது குற்றம் உறுதியானதால், அவருக்கு மரண தண்டனை விதித்து, நீதிபதி சுரேந்திரா நேற்று தீர்ப்பளித்தார்.

தீர்ப்பு வாசிக்கும் போது நீதிபதி, ‘சிரசேதம் செய்து, சிறுமியின் குரலை மூடலாம். ஆனால் நியாயத்தின் குரலை மூடி வைக்க, யாராலும் முடியாது’ என கருத்து தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us