பேரிடர் மேலாண்மை முன்னேற்பாடு அதிகாரிகளுக்கு கமிஷனர் அறிவுறுத்தல்
பேரிடர் மேலாண்மை முன்னேற்பாடு அதிகாரிகளுக்கு கமிஷனர் அறிவுறுத்தல்
UPDATED : நவ 22, 2026 12:00 AM
ADDED : நவ 21, 2026 11:18 PM

பெங்களூரு: பேரிடர் மேலாண்மை முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்துமாறு, மாநகராட்சி அதிகாரிகளுக்கு பேரிடர் மேலாண்மை சிறப்பு கமிஷனர் லட்சுமி பிரியா அறிவுறுத்தினார்.
பெங்களூரு ஜி.பி.ஏ., தலைமை அலுவலகத்தில், பருவமழை காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்னைகளை கையாளுவது குறித்து, மாநகராட்சி அதிகாரிகளுடன் பேரிடர் மேலாண்மை சிறப்பு கமிஷனர் லட்சுமி பிரியா, நேற்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது, அவர் கூறியதாவது:
ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்துக்கு உட்பட்ட பகுதிகளில், அடையாளம் காணப்பட்ட மழைநீர் தேங்கும் பகுதிகளில் பாதுகாப்பு பணிகளை பலப்படுத்த வேண்டும். மழை நீர் தேங்கினால் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரிடர் மேலாண்மை முன்னேற்பாடுகளை அதிகாரிகள் தீவிரப்படுத்த வேண்டும். பேரிடர் மேலாண்மை தொடர்பான தகவல்களை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் துரிதப்படுத்த வேண்டும்.
கட்டுப்பாட்டு அறைகள் மூலம் பெறப்படும் புகார்கள் மற்றும் தகவல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும். இதை அனைத்து அதிகாரிகளும் கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
