/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/கர்நாடகாவில் 18 வாரியம், கார்ப்பரேஷன்களுக்கு எம்.எல்.ஏ.,க்கள், காங்., பிரமுகர்கள் நியமனம்
கர்நாடகாவில் 18 வாரியம், கார்ப்பரேஷன்களுக்கு எம்.எல்.ஏ.,க்கள், காங்., பிரமுகர்கள் நியமனம்
கர்நாடகாவில் 18 வாரியம், கார்ப்பரேஷன்களுக்கு எம்.எல்.ஏ.,க்கள், காங்., பிரமுகர்கள் நியமனம்
UPDATED : நவ 22, 2026 12:00 AM
ADDED : நவ 21, 2026 11:52 PM

அ நிறம் | அளவு
பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள பல்வேறு கார்ப்பரேஷன், வாரியங்களுக்கு எம்.எல்.ஏ., க்கள், காங்கிரஸ் தலைவர்கள், உறுப்பினர்கள் என, 18 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மாநிலத்தில் உள்ள பல்வேறு கார்ப்பரேஷன், வாரியங்களுக்கு எம்.எல்.ஏ.,க்கள், காங்கிரஸ் தலைவர்கள், உறுப்பினர்கள் நியமனத்திற்கு, தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்து உள்ளார்.
இதன்படி, மைசூரு என்.ஆர்., தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., தன்வீர் செய்ட், முதல்வர் சிவகுமாரின் அரசியல் செயலராகவும், சட்டசபை தலைமை கொறடாவாக பேளூர் கோபாலகிருஷ்ணா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவ்விருவரும் அமைச்சர் பதவி எதிர்பார்த்து காத்திருந்தது குறிப்பிட்டக்கது.
