முதல்வர் ஜப்பான் சுற்றுப்பயணம் முதலீடுகளை ஈர்க்க திட்டம்
முதல்வர் ஜப்பான் சுற்றுப்பயணம் முதலீடுகளை ஈர்க்க திட்டம்
UPDATED : நவ 22, 2026 12:00 AM
ADDED : நவ 21, 2026 11:52 PM

பெங்களூரு: முதல்வர் சிவகுமார் தலைமையில் மாநில அரசின் உயர் மட்ட குழுவினர், மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக ஜப்பான் செல்கின்றனர். கர்நாடகாவுக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், இந்த சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
இதுகுறித்து, அரசு உயரதிகாரிகள் கூறியதாவது:
முதல்வர் சிவகுமார் தலைமையில், அரசின் உயர்மட்ட குழுவினர் நவம்பர் 23ம் தேதி முதல், 25 வரை, ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் செல்கின்றனர். இக்குழுவில் பெரிய, நடுத்தர தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீலும் இடம் பெற்றுள்ளார்.
கர்நாடகாவுக்கு முதலீடுகளை ஈர்க்கவும், அந்நாட்டின் நகர திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிகளையும், கர்நாடக குழுவினர் ஆய்வு செய்வர்.
முதல்வர் தலைமையிலான குழுவினர், இம்மாதம் 23ல் நகோயா, 24ல் ஒசாகா, 25ல் டோக்கியோ செல்வர். கர்நாடகாவுக்கு ஜப்பானின் முதலீட்டை பலப்படுத்துவது குறித்து, வர்த்தகம், தொழில்துறை ஒருங்கிணைப்பில் தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தப்படும். ஜப்பானின் நகர வடிவமைப்புகள் ஆய்வு செய்யப்படும்.
ஜப்பானின் முக்கியமான நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன், ஆலோசனை நடத்தி, கர்நாடகாவில் உள்ள தொழிற் கொள்கைகளை விவரிப்பர். இங்கு முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை கூறுவர்.
வரும் 27 வரை நடக்கும் ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்பர். 2027 ஏப்ரல் 20 முதல், 22 வரை, பெங்களூரின் அரண்மனை மைதானத்தில், ‘இன்வெஸ்ட் கர்நாடகா’ சார்பில் நடக்கவுள்ள, முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும்.
ஜப்பானில் கழிவுகள் நிர்வகிப்பு, கழிவில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வது, நகர அடிப்படை வசதிகள் உட்பட பல்வேறு அம்சங்களை கர்நாடக குழுவினர் ஆய்வு செய்வர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
