தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அமைச்சர் ஈஸ்வர் முன்னிலையில் எம்.எல்.சி., - எம்.எல்.ஏ., மோதல்

 அமைச்சர் ஈஸ்வர் முன்னிலையில் எம்.எல்.சி., - எம்.எல்.ஏ., மோதல்

 அமைச்சர் ஈஸ்வர் முன்னிலையில் எம்.எல்.சி., - எம்.எல்.ஏ., மோதல்


ADDED : ஜன 06, 2026 06:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 06, 2026 06:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பீதர்: அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே முன்னிலையில், காங்கிரஸ் எம்.எல்.சி., மற்றும் பா.ஜ., - எம்.எல்.ஏ., கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக வனத்துரை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே; இவர் பீதர் மாவட்டத்தின் பால்கி தொகுதி எம்.எல்.ஏ., என்பதுடன், மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் உள்ளார். இவரது தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அத்துடன், ஹும்னாபாத் தொகுதியில், வன நிலம் ஆக்கிரமிப்பு குறித்து விவாதம் நடந்தது. காங்கிரஸ் எம்.எல்.சி., பீமராவ் பாட்டீல் பேசுகையில், வன நில ஆக்கிரமிப்புக்கு, பா.ஜ., - எம்.எல்.ஏ., சித்து பாட்டீலே காரணம்' என்று புகார் கூறினார். உடன், எம்.எல்.ஏ., சித்து பாட்டீல் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பீமராவ் பாட்டீல், இருக்கையில் இருந்து எழுந்து சென்று, சித்து பாட்டீலின் நெஞ்சில் கைவைத்து தள்ளினார். கோபம் அடைந்த சித்து பாட்டீல், பீமராவ் பாட்டீலை பதிலுக்கு பிடித்து தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது. தன் முன்னரே எம்.எல்.சி., - எம்.எல்.ஏ., கைகலப்பில் ஈடுபட்டதால், அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே அதிர்ச்சி அடைந்தார்.

இருக்கையில் இருந்து எழுந்து சென்று இருவரையும் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனாலும், இருவரும் ஒருவரை ஒருவர் தாக்க முயற்சித்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட டி.எஸ்.பி., இருவரையும் சமாதானம் செய்து நாற்காலியில் அமர வைத்தார். இதையடுத்து கூட்டத்தை ஒத்திவைத்து விட்டு, அமைச்சர் புறப்பட்டு சென்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us