/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிவகுமாருக்கு முதல்வர் பதவி; எம்.எல்.சி., விஸ்வநாத் சிபாரிசு
/
சிவகுமாருக்கு முதல்வர் பதவி; எம்.எல்.சி., விஸ்வநாத் சிபாரிசு
சிவகுமாருக்கு முதல்வர் பதவி; எம்.எல்.சி., விஸ்வநாத் சிபாரிசு
சிவகுமாருக்கு முதல்வர் பதவி; எம்.எல்.சி., விஸ்வநாத் சிபாரிசு
ADDED : ஏப் 03, 2025 07:44 AM

மைசூரு: “கர்நாடகாவில் காங்கிரசை வளர்த்தது சிவகுமார். அவருக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும்,” என, ம.ஜ.த., - எம்.எல்.சி., விஸ்வநாத் சிபாரிசு செய்துள்ளார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கர்நாடகாவில் காங்கிரசை கட்டி எழுப்பியது துணை முதல்வர் சிவகுமார் தான். அவர் ஒரு உண்மையான காங்கிரஸ்காரர். ஆனால், சித்தராமையா மற்றொரு கட்சியில் இருந்து காங்கிரசில் இணைந்தவர்.
இதனால், சிவகுமாருக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும். முதல்வர் பதவி என்பது தனிப்பட்டவர்களின் சொத்து இல்லை.
சித்தராமையா, தன் வீட்டை ரியல் எஸ்டேட் அலுவலகமாக மாற்றி உள்ளார். முடா மனைகள் வாங்குவதற்கு 83,000 பேர் விண்ணப்பம் செய்து காத்திருந்தனர். இதில், 14 மனைகளை தன் மனைவிக்கு சித்தராமையா வாங்கிக் கொடுத்துவிட்டார். இதிலிருந்து சித்தராமையாவின் உண்மை முகத்தை அறிந்து கொள்ளலாம்.
சித்தராமையா முதன் முறையாக முதல்வரானபோது சிறப்பாக செயல்பட்டார். ஆனால், தற்போது, அவரது நிர்வாகம் செய்யும் விதத்தை பார்த்தால் மாநிலத்தில் அரசாங்கம் இருக்கிறதா என கேள்வி எழுகிறது.
உத்தரவாத திட்டங்களால் மாநிலத்தில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. கஷ்டப்பட்டு உழைத்து வரி செலுத்தும் மக்களின் வரிப்பணத்தை ஒழுங்காக செலவிடாமல் வீணாக்கப்படுகிறது. எதிர்க்கட்சியான பா.ஜ., தன் வேலையை ஒழுங்காக செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

