ADDED : மே 15, 2026 03:38 AM
அ நிறம் | அளவு
பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகள் மொபைல் போன் உபயோகிப்பது, மது அருந்துவது போன்ற வீடியோக்கள் வெளியாவது வழக்கமாகி விட்டது. இதனால், சிறை அதிகாரிகள் மீது புகார் எழுந்து உள்ளது.
இந்நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 12ம் தேதி இரவு சிறைத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில், கைதிகளிடமிருந்து மூன்று மொபைல் போன்கள், மூன்று சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இச்சம்பவம் குறித்து, பரப்பன அக்ரஹாரா போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பயோமெட்ரிக் உட்பட பல பாதுகாப்பு கருவிகள் இருக்கும் போது, சிறைக்குள் எப்படி மொபைல் போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் எப்படி கொண்டு செல்லப்பட்டன என போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.
