sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

அரசியலில் பணமே பிரதானம்: பசவராஜ் ஹொரட்டி அதிருப்தி

/

அரசியலில் பணமே பிரதானம்: பசவராஜ் ஹொரட்டி அதிருப்தி

அரசியலில் பணமே பிரதானம்: பசவராஜ் ஹொரட்டி அதிருப்தி

அரசியலில் பணமே பிரதானம்: பசவராஜ் ஹொரட்டி அதிருப்தி


ADDED : ஆக 26, 2025 03:01 AM

Google News

ADDED : ஆக 26, 2025 03:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: ''அரசியலில் பணமே பிரதானமாகியுள்ளது. இதற்கு ஆசிரியர் தொகுதியும் விதிவிலக்கு அல்ல,'' என மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி தெரிவித்தார்.

இது குறித்து, அவர் கூறியதாவது:

ஓட்டுக்காக பணம் பெறுவது, ஆசிரியர் தொகுதியிலும் சகஜமாகிவிட்டது. வெறும் ஐந்து முதல் 10 சதவீதம் பேர் மட்டுமே, நேர்மையாக உள்ளனர். மற்றவர்கள் பணம் மற்றும் அரசியல் நெருக்கடிக்கு பலியாகின்றனர்.

கர்நாடகாவில் 29,000 ஆசிரியர்கள் பணியிடங்கள், காலியாக உள்ளன. ஆனால் காலியிடங்களுக்கு, கவுரவ ஆசிரியர்களை நியமிக்கின்றனர்.

நிரந்தர ஊழியர்களுக்கு 48,000 ரூபாய் ஊதியம்; கவுரவ ஆசிரியர்களுக்கு 12,000 ரூபாய் வழங்குகின்றனர். இதை நிதித்துறை பணத்தை மிச்சப்படுத்தும் நடவடிக்கை என கூறுகிறது.

தேர்தல் பணிகள், ஆய்வு உட்பட பல பணிகளுக்கு ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். பள்ளிகளில் மதிய உணவு வழங்கும் பொறுப்பையும் சுமக்கின்றனர். மதிய உணவு திட்டத்துக்கு, தனி ஊழியர்களை நியமிக்கும்படி, முதல்வரிடம் வலியுறுத்தினேன். கல்வி சாராத விஷயங்களுக்கு, வேறு துறைகளின் ஊழியர்களை நியமிக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

மேல்சபையில் காலியாக உள்ள நான்கு நியமன உறுப்பினர் இடங்கள், திரையுலகம், ஊடகம், விளையாட்டு மற்றும் கல்வித்துறையில் சாதனை செய்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

45 ஆண்டுகள் இது குறித்து, முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் கடிதம் எழுதியுள்ளேன். என் கடிதம் டில்லி மேலிடத்துக்கு சென்றுள்ளது. தகுதியற்றவர்கள் நியமனத்தை நிராகரிக்கும் அதிகாரம், கவர்னருக்கு உள்ளது. கடந்த 45 ஆண்டுகளாக, மேல்சபையில் இருக்கிறேன்.

1985ல், ராமகிருஷ்ண ஹெக்டே முதல்வராக இருந்த போது, தார்வாட் நகரில் போட்டியிட, 'பி' பாரம் கொடுத்தார். அப்போது 3,000 ஆசிரியர்கள் என்னை ஆதரித்தனர். நான் போட்டியிட எதிர்ப்பும் எழுந்தது. இதனால், 'பி' பாரத்தை நான் திருப்பி கொடுத்தேன்.

இரண்டு முறை அமைச்சராக இருந்தேன். அதன்பின் எனக்கு அமைச்சராக வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடக்க பள்ளி துறை அமைச்சராக இருந்த போது, 48,313 ஆசிரியர்களை நியமித்தேன். துறையின் பட்ஜெட்டை அதிகரித்தேன்.

மதிய உணவு திட்டத்தை, உயர் நிலைப்பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு விஸ்தரித்தேன். கல்வித்துறையில் பல மாற்றங்களை கொண்டு வந்தேன். அதே போன்று, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்த போது, மாவட்டத்துக்கு ஒன்று வீதம், அறிவியல் மையம் அமைய செய்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us