ADDED : ஏப் 07, 2025 08:02 AM

கலாசிபாளையம் : 'மூக்கையா தேவர் பிறந்த நாள் விழாவை, தமிழக அரசு விழாவாக கொண்டாட வேண்டும்' என்று கர்நாடக தேவர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
கர்நாடக தேவர் சங்கம் சார்பில் சங்க அலுவலகத்தில், நேற்று முன்னாள் எம்.பி., மூக்கையா தேவரின் 103வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
அப்போது, 'தமிழகத்தின் உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.,வாக தொடர்ந்து ஐந்து முறையும்; ராமநாதபுரம் எம்.பி.,யாக ஒரு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மூக்கையா தேவர். அவரது பிறந்த நாளை, தமிழக அரசு விழாவாக கொண்டாட, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' என்று சங்க உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
சங்க தலைவர் கனகராஜன் தேவர், துணை செயலர் ஜெயபாண்டி தேவர், ஒருங்கிணைப்பு செயலர் மனோகர் தேவர், முன்னாள் தலைவர் மணிகண்ட தேவர்,
முன்னாள் பொருளாளர் கருப்புசாமி தேவர், இணை ஒருங்கிணைப்பு செயலர் மணிகண்ட பிரபு தேவர், இளைஞர் அணி இணை செயலர் சாமி மணிகண்டன் தேவர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

