/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தீபாவளிக்கு பட்டாசு வெடித்ததில் 100க்கும் மேற்பட்டோர் கண் பாதிப்பு
/
தீபாவளிக்கு பட்டாசு வெடித்ததில் 100க்கும் மேற்பட்டோர் கண் பாதிப்பு
தீபாவளிக்கு பட்டாசு வெடித்ததில் 100க்கும் மேற்பட்டோர் கண் பாதிப்பு
தீபாவளிக்கு பட்டாசு வெடித்ததில் 100க்கும் மேற்பட்டோர் கண் பாதிப்பு
ADDED : அக் 23, 2025 11:16 PM

பெங்களூரு: தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடித்தபோது, பெங்களூரில் 100க்கும் மேற்பட்டோருக்கு கண்கள் பாதிக்கப்பட்டன.
தீபாவளி பண்டிகையின்போது எச்சரிக்கையுடன் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அலட்சியம் காரணமாக பலரும் கண்களை இழந்து வருகின்றனர். நடப்பாண்டும் தீபாவளியையொட்டி, பெங்களூரு நகரில் 100க்கும் மேற்பட்டோருக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டது.
பெங்களூரு நாராயணா நேத்ராலயா மருத்துவமனையில், இதுவரை 90 பேர்; மின்டோ கண் மருத்துவமனையில் 37; சங்கரா கண் மருத்துவமனையில் 35; ஹேகேன் பிரபா கண் மருத்துவமனையில் 13; அகர்வால் கண் மருத்துவமனையில் 4; மோடி மருத்துவமனையில் 3 என, நுாற்றுக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மின்டோ மருத்துவமனை டாக்டர் சஷிதர் கூறியதாவது:
பட்டாசு வெடித்தபோது கண் பாதித்ததாக, 37 பேர் சிகிச்சைக்கு வந்தனர். இவர்களில் ஒன்பது பேர், உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். 14 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இரண்டு பேருக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது.
அரிசிகெரேயை சேர்ந்த 14 வயது சிறுவன், தன் நண்பர்களுடன் சேர்ந்து பட்டாசு வெடித்துள்ளார். அப்போது அவரது கண் பாதிக்கப்பட்டு கருவிழி சேதமடைந்து, ஒரு கண்ணை இழந்துவிட்டார்.
வறுமை காரணமாக செங்கல் சூளையில் தாயுடன், அவரது மகனும் வேலை செய்து வந்த நிலையில், மகனின் எதிர்காலத்தை நினைத்து கண்ணீர் வடித்து வருகிறார். அதுபோன்று, பீஹாரை சேர்ந்த 19 வயது இளைஞரும், இடது கண்ணை முற்றிலும் இழந்து விட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.

