ஸ்ரீ சத்ய சாய்பாபா 101வது பிறந்த நாள் 30க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கம்
ஸ்ரீ சத்ய சாய்பாபா 101வது பிறந்த நாள் 30க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கம்
UPDATED : நவ 20, 2026 12:00 AM
ADDED : நவ 19, 2026 11:16 PM
பெங்களூரு: ‘ஸ்ரீ சத்யசாய் பாபாவின் 101வது பிறந்த நாள் வரும் ௨௩ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, பக்தர்கள் வசதிக்காக, பெனுகொன்டா – ஸ்ரீ சத்ய சாய் பிரசாந்தி நிலையம் – தர்மாவரம் வழியாக 30 ரயில்களின் வழித்தடம் தற்காலிகமாக மாற்றப்பட்டு உள்ளது’ என தென்மேற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:
எஸ்.எஸ்.பி.என்., எனும் ஸ்ரீ சத்ய சாய் பிரசாந்தி நிலையத்தில் நின்று செல்லும் ரயில்கள்:
எண் 12251: யஷ்வந்த்பூர் – கோர்பா வைன்கங்கா வாராந்திர விரைவு ரயில், இன்றும், வரும் 24ம் தேதி நிற்கும்.
22683: யஷ்வந்த்பூர் – லக்னோ வாராந்தி அதிவிரைவு ரயில், வரும் 23ம் தேதி நிற்கும்.
16593: கே.எஸ்.ஆர்., பெங்களூரு – ஹஜுர் சாஹிப் நந்தென் தினசரி ரயில், இன்று முதல் 25ம் தேதி வரை நிற்கும்.
16594: ஹஜுர் சாஹிப் நந்தென் – கே.எஸ்.ஆர்., பெங்களூரு விரைவு ரயில் இன்று முதல் 25ம் தேதி வரை நிற்கும்.
18064: எலஹங்கா – சன்த்ரகாச்சி வாராந்திர விரைவு ரயில், நாளை (21ம் தேதி) நிற்கும்.
06571: யஷ்வந்த்பூர் – கடிஹார் வாராந்திர விரைவு ரயில், நவ., 24ல் நிற்கும்.
06581: யஷ்வந்த்பூர் – சஹர்ஷா வாராந்திர விரைவு ரயில், நவ., 22ல் நிற்கும்.
04150: யஷ்வந்த்பூர் – பிரயாக்ராஜ் வாராந்திர விரைவு ரயில், நவ., 21, 28 ம் தேதிகளில் நிற்கும்.
04136: யஷ்வந்த்பூர் – சுபே தர்காஞ்ச் வாராந்திர விரைவு ரயில், நவ., 23ல் நிற்கும்.
16613: ராஜ்கோட் – கோயம்புத்துார் வாராந்திர விரைவு ரயில், நவ., 22 ல் நிற்கும்.
07097: ஹைதராபாத் – மங்களூரு மத்திய வாராந்திர விரைவு ரயில், நவ., 25ல் நிற்கும்.
07098: மங்களூரு – ஹைதராபாத் வாராந்திர விரைவு ரயில், நவ., 26ல் நிற்கும்.
12975: மைசூரு – ஜெய்ப்பூர் வாராந்திர அதிவிரைவு ரயில், நவ., 21ல் நிற்கும்.
12976: ஜெய்ப்பூர் – மைசூரு வாராந்திர அதிவிரைவு ரயில், நவ., 23, 25ல் நிற்கும்.
16534: கே.எஸ்.ஆர்., பெங்களூரு – ஜோத்பூர் வாராந்திர விரைவு ரயில், நவ., 22ல் நிற்கும்.
16531: அஜ்மீர் காரிப் நவாஸ் -– கே.எஸ்.ஆர்., பெங்களூரு வாராந்திர வரைவு ரயில், நவ., 23ல் நிற்கும்.
12592: யஷ்வந்த்பூர் – கோரக்பூர் வாராந்திர சிறப்பு ரயில், நவ., 23ல் நிற்கும்.
12591: கோரக்பூர் – யஷ்வந்த்பூர் வாராந்திர சிறப்பு ரயில், நவ., 21ல் நிற்கும்.
18261: பிலாஸ்பூர் – எலஹங்கா வாராந்திர விரைவு ரயில், நவ., 25ல் நிற்கும்.
18262: எலஹங்கா – பிலாஸ்பூர் வாராந்திர விரைவு ரயில், நவ., 26ல் நிற்கும்.
16577: யஷ்வந்த்பூர் – பீதர் வாராந்திர விரைவு ரயில், நவ., 21ல் நிற்கும்.
16578: பீதர் – யஷ்வந்த்பூர் வாராந்திர விரைவு ரயில், நவ., 22 ல் நிற்கும்.
12647: கோயம்புத்துார் – ஹஸ்ரத் நிஜாமுதீன் கொங்கு வாராந்திர அதிவிரைவு ரயில், நவ., 22ல் நிற்கும்.
12648: ஹஸ்ரத் நிஜாமுதீன் – கோயம்புத்துார் கொங்கு வாராந்திர அதிவிரைவு ரயில், நவ., 25ல் நிற்கும். இது போன்று மொத்தம் 30க்கும் மேற்பட்ட ரயில்கள் ஸ்ரீசத்ய சாய் பிரசாந்தி ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.
