ADDED : ஜூன் 11, 2025 12:15 AM

மைசூரு: தாயும், மகளும் சந்தேகத்திற்கிடமாக துாக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தனர்.
மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடு தாலுகாவின், கொத்தனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் ஜெயராம், 45. இவரது மனைவி மஹாதேவம்மா, 40. தம்பதிக்கு சுப்ரியா, 20, என்ற மகள் உள்ளார்.
பல ஆண்டுகளாகவே, ஜெயராம் வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார். கணவர் மீது பல முறை போலீஸ் நிலையத்தில், மஹாதேவம்மா புகார் அளித்துள்ளார். போலீசாரும் ஜெயராமை அழைத்து எச்சரித்து அனுப்பினர். ஆனால் அவர் திருந்தியதாக தெரியவில்லை.
இந்நிலையில் நேற்று காலை, மஹாதேவம்மாவும், அவரது மகள் சுப்ரியாவும் துாக்கில் சடலங்களாக தொங்கினர். இவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக, ஜெயராம் கூறியுள்ளார். ஆனால் இவரே மனைவி, மகளை கொன்று விட்டு, தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடுகிறார் என, மஹாதேவம்மாவின் குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து அங்கு வந்த ஹுல்லஹள்ளி போலீசார், தாய், மகளின் உடல்களை மீட்டு, விசாரிக்கின்றனர்.