sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பாம்பு கடித்து தாய், மகன் பலி

பாம்பு கடித்து தாய், மகன் பலி

பாம்பு கடித்து தாய், மகன் பலி


ADDED : ஜூலை 01, 2025 03:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2025 03:39 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராய்ச்சூர்: பாம்பு கடித்து தாய், மகன் உயிரிழந்தனர்.

ராய்ச்சூர் மாவட்டம், ஹைருண்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பம்மா, 35. இவருக்கு கணவரும், மகன் பசவராஜ், 10, உட்பட இரு பிள்ளைகளும் இருந்தனர். ஜூன் 28ம் தேதி இரவில், சுப்பம்மாவுக்கும், பசவராஜுக்கும் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதை பார்த்த கணவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதற்குள், மகன் பசவராஜ் இறந்துவிட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுப்பம்மாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நன்றாக இருந்தவர்கள் திடீரென இறந்ததற்கான காரணம் தெரியாமல் குடும்பத்தினர் தவித்தனர். இருவரின் கால்களிலும் பாம்பு கடித்த தடயம் இருந்ததை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இரவில் துாங்கிக் கொண்டிருந்தபோது, பாம்பு கடித்தது இருவருக்கும் தெரியவில்லை.

தேவதுர்கா போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us