தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 2 மகன்களை கொன்று தாய் தற்கொலை முயற்சி

 2 மகன்களை கொன்று தாய் தற்கொலை முயற்சி

 2 மகன்களை கொன்று தாய் தற்கொலை முயற்சி


ADDED : மே 03, 2026 11:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 03, 2026 11:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மத்திகெரே: கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறில், எலி பேஸ்ட் கலந்த பாலை கொடுத்து, இரு மகன்களை கொன்று, தாய் தற்கொலைக்கு முயற்சித்தார்.

துமகூரின் பாவகடாவை சேர்ந்தவர் பிரசாந்த், 35. இவரது மனைவி பவித்ரா, 33. தம்பதிக்கு நிவேத், 4, நிர்மல், 2 என்ற இரு மகன்கள் இருந்தனர்.

மனைவி, மகன்களுடன் பெங்களூரு மத்திகெரே கோகுலா முதலாவது ஸ்டேஜில், வாடகை வீட்டில் வசித்த பிரசாந்த், மொபைல் போன் விற்பனை கடையில் வேலை செய்தார். கணவன், மனைவி இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும், பக்கத்து வீட்டின் சமாதானம் செய்து வைப்பதும் வழக்கமாக நடந்து வந்து உள்ளது.

இதுபோல நேற்று முன்தினம் இரவும் கணவன், மனைவி இடையில் குடும்ப தகராறு ஏற்பட்டது. மனம் உடைந்த பவித்ரா தற்கொலை செய்ய முடிவு செய்தார். தான் இறந்து விட்டால் மகன்களை யார் பராமரிப்பர் என்ற கவலையில், மகன்களை கொன்று தானும் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

எலி பேஸ்ட்டை பாலில் கலந்து மகன்களுக்கு கொடுத்து விட்டு, தானும் அதே பாலை கொடுத்தார். வாயில் நுரைதள்ளிய நிலையில் தாய், மகன்கள் மயங்கி விழுந்தனர். நேற்று காலை பிரசாந்த் எழுந்து பார்த்த போது, மனைவி, மகன்கள் நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அக்கம்பக்கத்தினர் உதவியுடன் 3 பேரையும், தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் நிவேத், நிர்மல் இறந்தனர். பவித்ராவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. யஷ்வந்த்பூர் போலீசார்விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us