கார் மீது லாரி மோதி விபத்து ஒரே குடும்பத்தில் மூவர் பலி
கார் மீது லாரி மோதி விபத்து ஒரே குடும்பத்தில் மூவர் பலி
ADDED : மே 03, 2026 11:28 PM

சாம்ராஜ்நகர்: கார் மீது டிப்பர் லாரி மோதியதில், கேரளத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சாம்ராஜ்நகர் குண்டுலுபேட் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், ஒரு டிப்பர் லாரி நேற்று காலை கேரளாவை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, சாம்ராஜ்நகரை நோக்கி எதிர்திசையில் வந்த கார் மீது லாரி எதிர்பாராத விதமாக மோதியது. இதில், கார் பள்ளத்தில் விழுந்து நொறுங்கியது. லாரி ஓட்டுநர் தப்பி சென்றுவிட்டார்.
காரில் பயணித்த ஐவரில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீதமுள்ள இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குண்டுலுபேட் போலீசார் விசாரிக்கின்றனர்.
இது குறித்து, குண்டுலுபேட் போலீசார் கூறியதாவது:
கேரளம், கண்ணுாரின் ஒரே குடும்பத்தை சேர்ந்த முனீரா, 45, முனீர், 30, சானியா மிர்சா, 22, சஹால் பர்வீன், 28, மொஹித், 3, ஆகிய ஐந்து பேர் கொடைக்கானல் செல்வதற்காக ஒரே காரில் நேற்று பயணித்தனர். அப்போது, கார் மீது லாரி மோதிய விபத்தில், முனீர், முனிரா, மொஹித் ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர். மீதமுள்ள இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
