தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ குடிகார கணவர் தொல்லையால்  2 மகள்களுடன் தாய் தற்கொலை

 குடிகார கணவர் தொல்லையால்  2 மகள்களுடன் தாய் தற்கொலை

 குடிகார கணவர் தொல்லையால்  2 மகள்களுடன் தாய் தற்கொலை


ADDED : மே 01, 2026 12:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 01, 2026 12:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தங்கவயல்: குடிகார கணவர் கொடுத்த தொல்லையால், இரண்டு மகள்களுடன் கிணற்றில் குதித்து, தாய் தற்கொலை செய்து கொண்டார்.

கோலாரின் முல்பாகல் பி.கொரவனுார் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணப்பா, 45. இவரது மனைவி லட்சுமம்மா, 35. தம்பதிக்கு அரவிந்த், 16 என்ற மகனும், ககனஸ்ரீ, 14, ரெட்டம்மா, 12 என்ற மகள்களும் இருந்தனர்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையான நாராயணப்பா, வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவி, பிள்ளைகளிடம் தகராறு செய்து தொல்லை கொடுத்து உள்ளார்.

நேற்று முன்தினம் அரவிந்த், தனது மாமா வெங்கடேஷ் வீட்டிற்கு சென்று விட்டார். வீட்டில் லட்சுமம்மாவும், அவரது இரு மகள்களும் இருந்தனர்.

குடித்து விட்டு வந்த நாராயணப்பா, மனைவி, மகள்களிடம் தகராறு செய்தார். மனம் உடைந்த லட்சுமம்மா, மகள்களை அழைத்து கொண்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார்.

ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள கிணற்றில் தாயும், மகள்களும் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். நேற்று காலை 3 பேரின் உடல்களும் கிணற்றில் மிதந்ததை, கிராம மக்கள் பார்த்தனர்.

முல்பாகல் போலீசார், தீயணைப்பு படையினர் சென்று, மூன்று உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். வெங்கடேஷ் அளித்த புகாரில், நாராயணப்பாவிடம் விசாரணை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us