/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கூட்ட நெரிசலில் இறந்த சிறுமியின் நகைகள் திருடு போனதாக தாய் புகார்
/
கூட்ட நெரிசலில் இறந்த சிறுமியின் நகைகள் திருடு போனதாக தாய் புகார்
கூட்ட நெரிசலில் இறந்த சிறுமியின் நகைகள் திருடு போனதாக தாய் புகார்
கூட்ட நெரிசலில் இறந்த சிறுமியின் நகைகள் திருடு போனதாக தாய் புகார்
ADDED : ஜூலை 24, 2025 11:18 PM

பெங்களூரு: கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த சிறுமி திவ்யான்ஷி அணிந்திருந்த நகைகள் திருடு போனதாக, பவுரிங் மருத்துவமனை மீது, சிறுமியின் தாய் புகார் செய்துள்ளார்.
ஆர்.சி.பி., அணி ஐ.பி.எல்., கோப்பையை வென்றதை கொண்டாடும் வகையில், கடந்த ஜூன் 4ம் தேதி சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மைதானம் முன் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
இவர்களில் பெங்களூரு எலஹங்கா கட்டிகேனஹள்ளியில் வசிக்கும் அஸ்வினியின் மகள் திவ்யான்ஷி, 13, என்பவரும் ஒருவர். இந்நிலையில் பவுரிங் அரசு மருத்துவமனை மீது, கமர்சியல் தெரு போலீஸ் நிலையத்தில் அஸ்வினி நேற்று புகார் செய்தார்.
பிறந்தநாள் பரிசு பின், அவர் அளித்த பேட்டி:
கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த என் மகள் திவ்யான்ஷி உடல், பவுரிங் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
உடலை எங்களிடம் ஒப்படைத்த பிறகு, திவ்யான்ஷி அணிந்திருந்த தங்க கம்மல்கள், நெக்லசை, பிரேத பரிசோதனை கூடத்தின் ஊழியர்கள் எங்களிடம் தரவில்லை.பவுரிங் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, சரியான பதில் கூற மறுக்கின்றனர்.
திவ்யான்ஷிக்கு தங்க நகைகள் அணிவதில் ஆர்வம் கிடையாது. ஆனால் அவரது பிறந்தநாளுக்கு, அவரது மாமா ஜோடி தங்க கம்மலை பரிசாக வழங்கினார்.
பிணவறை அந்த கம்மல் அவருக்கு பிடித்திருந்தது. ஒன்றரை ஆண்டுகளாக அந்த கம்மலை கழற்றவே இல்லை.
ஆர்.சி.பி., அணி வெற்றி கொண்டாட்டத்திற்கு சென்றபோது கூட, தங்க கம்மல்களை கழற்றி வைத்துவிட்டு, வரும்படி கூறினேன்.
ஆனால், பத்திரமாக பார்த்துக் கொள்வதாக அணிந்து வந்தார். அவர் அணிந்திருந்த மற்ற நகைகளை தரவில்லை என்றால் கூட பரவாயில்லை. ஆனால் அந்த கம்மல்கள், எனக்கு கண்டிப்பாக வேண்டும்.
அவரது நினைவாக அதை வைத்திருக்க நினைக்கிறேன். சரியாக பதில் அளிக்காததால் பவுரிங் மருத்துவமனை மீது, போலீசில் புகார் செய்துள்ளேன்.
திவ்யான்ஷி உடல் பிரேத பரிசோதனை அறையின் முன் அமர்ந்து அவரது பாட்டி கதறி அழுதார். அப்போது அங்கு வந்த துணை முதல்வர் சிவகுமார், 'உங்கள் பேத்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது' என்று கூறினார். பிணவறை முன் அமர்ந்து, சிகிச்சை அளிப்பதாக அவர் கூறினார்.
'பிணவறையில் என்ன சிகிச்சை அளிக்கின்றனர்?' என்பது எனக்கு தெரியவில்லை. ஆறுதல் கூறிய புகைப்படத்தை, சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.