/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாலுாரில் 'ஏரோ ஸ்பேஸ் பார்க்' எம்.எல்.ஏ.,க்கள் வேண்டுகோள்
/
மாலுாரில் 'ஏரோ ஸ்பேஸ் பார்க்' எம்.எல்.ஏ.,க்கள் வேண்டுகோள்
மாலுாரில் 'ஏரோ ஸ்பேஸ் பார்க்' எம்.எல்.ஏ.,க்கள் வேண்டுகோள்
மாலுாரில் 'ஏரோ ஸ்பேஸ் பார்க்' எம்.எல்.ஏ.,க்கள் வேண்டுகோள்
ADDED : ஜூலை 24, 2025 11:17 PM
மாலுார்: தேவனஹள்ளியின் சென்னராயபட்டணா, 'ஹைடெக் டிபன்ஸ் மற்றும் ஏரோ ஸ்பேஸ் பார்க்' அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேவனஹள்ளி தாலுகா, சென்னராயபட்டணா அருகே, 1,500 ஏக்கரில், 'ஹைடெக் டிபென்ஸ் மற்றும் ஏரோ ஸ்பேஸ் பார்க்' அமைக்க, விவசாய நிலங்களை கையகப்படுத்த அரசு திட்டமிட்டிருந்தது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். தொடர் போராட்டங்கள் நடத்தியதால் அத்திட்டம் கைவிடப்பட்டது.
இத்திட்டம், ஆந்திராவுக்கு செல்லப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களான மாலுாரின் நஞ்சே கவுடா, கோலாரின் கொத்துார் மஞ்சுநாத், முதல்வரின் அரசியல் செயலர் நசீர் அகமது ஆகியோர் முதல்வர் சித்தராமையாவை நேற்று சந்தித்தனர்.
'மாலுாரின் சிவாரமபட்டணா அருகே கர்நாடக தொழில் மேம்பாட்டு வாரியம், தொழிற்சாலைகள் அமைக்க, 1,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தியுள்ளது.
'இங்கு, ஹைடெக் டிபென்ஸ் மற்றும் ஏரோ ஸ்பேஸ் பார்க் அமைக்க வேண்டும். இங்கு அமைத்தால், கோலார் மாவட்டத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
'வேலை இல்லா திண்டாட்டம் நீங்கும். இந்த இடத்தின் அருகே, பெங்களூரு -- சென்னை எக்ஸ்பிரஸ் காரிடார் சாலை, தேசிய நெடுஞ்சாலை - 95, பெங்களூரு சர்வதேச விமான நிலையம் அருகே உள்ளது.
'எனவே இந்த இடத்தில் அமைக்க ஆவன செய்ய வேண்டும்' என, அவர்கள் கோரினர்.
இதற்கு முதல்வர் சித்தராமையா, 'சாதக பாதகங்கள் குறித்து, விவாதித்து ஆவன செய்யப்படும்' என்றார்.