தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஆற்றில் மூழ்கிய மகனை காப்பாற்ற முயன்ற தாயும் பலி

 ஆற்றில் மூழ்கிய மகனை காப்பாற்ற முயன்ற தாயும் பலி

 ஆற்றில் மூழ்கிய மகனை காப்பாற்ற முயன்ற தாயும் பலி


ADDED : ஏப் 23, 2026 04:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2026 04:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெலகாவி: ஆற்றில் குளிக்க சென்ற மகன், தண்ணீரில் தத்தளிப்பதை பார்த்து காப்பாற்ற சென்ற தாயும், மகனும் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

பெலகாவி மாவட்டம், ஹூக்கேரி தாலுகா சங்கேஸ்வர் நகரை சேர்ந்தவர் லட்சுமி, 27. இவரது மகன் சுப்ரீத், 9. நேற்று முன்தினம் மாலை சங்கரலிங்க சுவாமி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றனர். தரிசனம் முடித்த பின், கோவில் அருகில் ஓடும் ஹிரண்யகேசி ஆற்றுக்கு சென்றனர். ஆற்றில் குளிப்பதற்காக சுப்ரீத் இறங்கினார். ஆற்றின் ஆழம் தெரியாததால், நீரில் மூழ்கி தத்தளித்தார்.

இதை பார்த்த தாய் லட்சுமி, அவரும் ஆற்றில் குதித்து மகனை காப்பாற்ற முயற்சித்தார். லட்சுமிக்கும் நீச்சல் தெரியாததால், இருவரும் நீரில் மூழ்கி இறந்தனர்.

தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் நேற்று முன்தினம் இரவு முழுதும் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று காலையில் லட்சுமியின் உடலை மீட்டனர். மகனின் உடலை தேடி வருகின்றனர். சங்கேஸ்வர் போலீசார் விசாரிக் கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us