தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ நகை கடையில் குழந்தையை மறந்து விட்டு சென்ற தாய்

நகை கடையில் குழந்தையை மறந்து விட்டு சென்ற தாய்

நகை கடையில் குழந்தையை மறந்து விட்டு சென்ற தாய்


ADDED : ஆக 07, 2025 11:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 07, 2025 11:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஹாசன்:தங்க நகை வாங்க கடைக்கு வந்த பெண் ஒருவர், தன் இரண்டரை வயது பெண் குழந்தையை மறந்து சென்றது, பரபரப்பை ஏற்படுத்தியது.

ஹாசன் நகரில் வசிப்பவர் உஷா, 30. இவருக்கு இரண்டரை வயதில் சுப்ரியா என்ற பெண் குழந்தை உள்ளது.

இவர் நேற்று காலை தங்க நகை வாங்குவதற்காக, தன் குழந்தையுடன், ஹாசன் நகரின் காந்தி பஜாரில் உள்ள நகைக்கடைக்கு சென்றார்.

குழந்தையை அங்கு விட்டு விட்டு, ஆர்வத்துடன் நகைகளை தேர்வு செய்து கொண்டிருந்தார். பிடித்தமான நகையை வாங்கிய மகிழ்ச்சியில், குழந்தையை அழைத்து வந்ததையே மறந்துவிட்டு, வீட்டுக்கு திரும்பிச் சென்றுவிட்டார்.

வீட்டுக்கு சென்ற பின்னரே, அவருக்கு குழந்தையை மறந்து, நகைக் கடையிலேயே விட்டு வந்தது ஞாபகத்திற்கு வந்தது.

அதிர்ச்சி அடைந்த அவர், அழுது புலம்பியபடி மீண்டும் நகைக்கடைக்கு வந்து குழந்தையை தேடினார். சுற்றுப்பகுதிகளில் தேடியும் கிடைக்காததால், ஹாசன் நகர் போலீஸ் நிலையத்துக்கு சென்று, புகார் அளித்தார்.

போலீசாரும் வழக்கு பதிவு செய்து, குழந்தையை தேட துவங்கினர்.

இதற்கிடையே நகைக்கடை வாசலில் பெண் குழந்தை அழுதபடி நின்றிருப்பதை, அப்பகுதியில் வசிக்கும் பவானி என்பவர் கவனித்தார். குழந்தையின் பெற்றோரை தேடியும் கிடைக்கவில்லை என்பதால் குழந்தையை சமாதானம் செய்து தன் வீட்டுக்கு அழைத்து வந்து உணவு கொடுத்தார்.

அதன்பின் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க, அழைத்து வந்தார். அப்போது குழந்தையின் தாய் உஷா அங்கிருந்தார்.

போலீசாரின் முன்னிலையில், குழந்தையை தாயிடம் சேர்த்தார். இந்த சம்பவம், நகைக்கடை கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

உஷா கூறுகையில், “நான் செய்த தவறால், குழந்தையை கடையில் விட்டு விட்டு வந்தேன். பவானி போன்ற நல்ல மனம் கொண்டவரால், என் குழந்தை எனக்கு திரும்ப கிடைத்தது. இந்த சம்பவம் பெற்றோருக்கு, நல்ல பாடமாக அமைந்துள்ளது,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us