/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மருமகனை கொலை செய்ய கிரைம் நாவல் படித்த மாமியார்
/
மருமகனை கொலை செய்ய கிரைம் நாவல் படித்த மாமியார்
ADDED : மார் 27, 2025 05:35 AM

சோழதேவனஹள்ளி: தொழில் அதிபர் கொலையான வழக்கில் கைது செய்யப்பட்ட மாமியார், மருமகனை கொலை செய்ய, 'கிரைம் நாவல்கள்' வாங்கி படித்தது தெரியவந்துள்ளது.
ராம்நகரின் மாகடி குதுாரை சேர்ந்தவர் லோக்நாத் சிங், 37. மாகடி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணாவின் ஆதரவாளர். கடந்த 22 ம் தேதி பெங்களூரு சோழதேவனஹள்ளி பி.ஜி.எஸ்., லே - அவுட் பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் லோக்நாத்சிங் மாமியார் ஹேமாபாய், 37, மனைவி யஷஸ்வினி, 20 கைது செய்யப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில், யஷஸ்வினியை ஆபாசமாக வீடியோ எடுத்து, அந்த வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி லோக்நாத்சிங் திருமணம் செய்தது தெரிந்தது. பல பெண்களுடன் அவர் தொடர்பில் இருப்பது தெரிந்ததால் ஏற்பட்ட தகராறில், கொலை நடந்தது தெரியவந்தது.
போலீசார் மேற்கொண்டு நடத்திய விசாரணையில், லோக்நாத்சிங், தன் மாமியார் மீதும் காம பார்வை வைத்ததும் அம்பலமாகி உள்ளது. ஹேமாபாயை பற்றி யஷஸ்வினியிடம் ஆபாசமாக பேசி வந்துள்ளார்.
இதுபற்றி அறிந்து வேதனை அடைந்த ஹேமாபாய், லோக்நாத்சிங்கை எப்படி கொலை செய்வது என்று, கிரைம் நாவல்களை வாங்கி படித்ததும் தெரிந்துள்ளது.