தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/மாற்றுத்திறனாளி மகளை கொன்று தாய் தற்கொலை

மாற்றுத்திறனாளி மகளை கொன்று தாய் தற்கொலை

மாற்றுத்திறனாளி மகளை கொன்று தாய் தற்கொலை


UPDATED : அக் 26, 2026 12:00 AM

ADDED : அக் 25, 2026 09:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2026 12:00 AM ADDED : அக் 25, 2026 09:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுப்பி: மாற்றுத்திறனாளி மகளை கொலை செய்த பெண், தானும் தற்கொலை செய்து கொண்டார்.

உடுப்பி மாவட்டம், குந்தாபுரா தாலுகாவின், ஷானாடி மதகா கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர், 45. இவரது மனைவி நேத்ராவதி, 40. தம்பதிக்கு 14 வயதில் மகளும், 1 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். சுதாகர் கூலி வேலை செய்தார்.

மூத்த மகள் பிறவியில் இருந்தே, மாற்றுத்திறனாளி. நடக்கவோ, அமரவோ, பேசவோ முடியாத நிலையில் இருந்தார். மகளுக்கு உணவு ஊட்டுவது, குளிப்பாட்டுவது என, தேவையான பணிவிடைகளை, தாய் நேத்ராவதியே செய்து வந்தார்.

சுதாகர், நேற்று காலை பணிக்கு சென்றிருந்தார். அதன்பின் வீட்டு வேலைகளை முடித்த நேத்ராவதி, கத்தியால் மகளின் கழுத்தை அறுத்து, கொலை செய்தார். அதன்பின் தானும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்பகுதியினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

மகளின் நிலையால், நேத்ராவதி மன அழுத்தத்துக்கு ஆளாகி இருக்கலாம் என, போலீசார் கருதுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us