/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சகோதரர்கள் இடையே சண்டை விலக்கிவிட வந்த தாய் கொலை
/
சகோதரர்கள் இடையே சண்டை விலக்கிவிட வந்த தாய் கொலை
ADDED : மே 30, 2025 11:10 PM
ஹூப்பள்ளி: அண்ணன், தம்பிக்கு இடையே ஏற்பட்ட மோதல், தாயின் கொலையில் முடிந்தது.
ஹூப்பள்ளி நகரின் தொரவி கக்கலா கிராமத்தில் வசித்தவர் பத்மா, 46. இவருக்கு மஞ்சுநாத், 25, லட்சுமண், 22, என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் வீட்டு அருகில் முடிதிருத்தும் கடை நடத்துகின்றனர்.
சகோதரர்களுக்குள் அவ்வப்போது சண்டை நடக்கும். அடித்துக் கொள்வதும் வழக்கம். சகோதாரர்கள் வழக்கம் போன்று, முடிதிருத்தும் கடை சென்று, பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஏதோ காரணத்தால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. பரஸ்பரம் தாக்கிக் கொண்டனர். ஜன்னல் கண்ணாடி நொறுங்கியது. இதையறிந்த பத்மா, மகன்களின் சண்டையை விலக்கி விட, அங்கு வந்தார்.
மகன்களை சமாதானம் செய்ய முயற்சித்தார். அப்போது கோபத்தில் இருந்த மஞ்சுநாத், உடைந்து கிடந்த ஜன்னல் கண்ணாடி துண்டை எடுத்து, தாயின் வயிற்றில் குத்தினார். படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி, அவர் உயிரிழந்தார்.
தகவல் அறிந்து, கிராமத்துக்கு வந்த கமரிபேட் போலீசார், மஞ்சுநாத்தை கைது செய்தனர்.