/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கருத்தடை அறுவை சிகிச்சை 2 குழந்தைகளின் தாய் பலி
/
கருத்தடை அறுவை சிகிச்சை 2 குழந்தைகளின் தாய் பலி
ADDED : செப் 03, 2025 09:56 AM

கொப்பால், : கருத்தடை அறுவை சிகிச்சை செய்த, இரண்டு பெண் குழந்தைகளின் தாய் பலியானார். 'மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை செய்ததே காரணம்' என, குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர்.
கொப்பால் அருகே ஹிரேவன்கல்குண்டா கிராமத்தை சேர்ந்தவர் மல்லம்மா, 23. திருமணமான இவருக்கு இரண்டரை வயதிலும், ஐந்து மாத பெண் குழந்தையும் உள்ளனர். இரண்டு குழந்தைகள் இருப்பதால், கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய மல்லம்மா முடிவு செய்தார்.
நேற்று முன்தினம் ஹிரேவன்கல்குண்டா கிராமத்தில் உள்ள, அரசு சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை அவருக்கு கருத்தடை அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது அதிகளவில் ரத்தப் போக்கு ஏற்பட்டது.
கொப்பால் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு, ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டார். செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். 'மயக்க மருந்து கொடுக்காமல், மல்லம்மாவுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ததால் தான் அவர் இறந்துவிட்டார்' என, டாக்டர் மீது, மல்லம்மாவின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர்; போலீசிலும் புகார் செய்துள்ளனர்.