/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மகள் தற்கொலையால் தாயும் துயர முடிவு
/
மகள் தற்கொலையால் தாயும் துயர முடிவு
ADDED : ஜூலை 15, 2025 04:40 AM

ஒயிட்பீல்டு: மகள் தற்கொலை செய்து கொண்டதை பார்த்த தாயும் தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரு, ஒயிட் பீல்டின் நாகொண்டனஹள்ளியில் வசித்தவர் ரக்ஷிதா ரெட்டி, 46. இவரது கணவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். ஆந்திராவை சேர்ந்த இவர்கள், தற்போது பெங்களூரில் வசித்தனர். இவர்களின் மகள் ஸ்ரீஜா, 24. இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
ஸ்ரீஜா, சமீப நாட்களாக மன அழுத்ததால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை 8:30 மணியளவில், தந்தை பணிக்கு சென்ற பின், ஸ்ரீஜா அறைக்கு சென்று, மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிறிது நேரத்துக்கு பின், அறைக்கு வந்த தாய் ரக்ஷிதா, மகள் தற்கொலை செய்து கொண்டதை பார்த்து, அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் கணவருக்கு போன் செய்து, விஷயத்தை கூறினார். 'எனக்கும் வாழ விருப்பம் இல்லை. நானும் இறக்கிறேன்' என கூறியுள்ளார். கணவர் விரைந்து வீட்டுக்கு வருவதற்குள், ரக்ஷிதா மகளின் உடலை மின் விசிறியில் இருந்து, கீழே இறக்கிவிட்டு, தானும் அதே மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஒயிட் பீல்டு போலீசார் விசாரிக்கின்றனர்.