தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ டிஜிட்டல் விளம்பரங்களுக்கு வாகன ஓட்டிகள் எதிர்ப்பு

 டிஜிட்டல் விளம்பரங்களுக்கு வாகன ஓட்டிகள் எதிர்ப்பு

 டிஜிட்டல் விளம்பரங்களுக்கு வாகன ஓட்டிகள் எதிர்ப்பு


ADDED : மே 20, 2026 10:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2026 10:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: மெட்ரோ ரயில் துாண்களில், டிஜிட்டல் விளம்பரங்கள் காட்சிப்படுத்த முடிவு செய்வதற்கு, வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில், மெட்ரோ ரயில் சேவை முக்கியமானதாக உள்ளது. டிக்கெட் மட்டுமின்றி விளம்பரங்கள் மூலமும் மெட்ரோ நிறுவனம் வருமானம் ஈட்டி வருகிறது.

அவ்வகையில், 5,000க்கும் மேற்பட்ட துாண்களில் டிஜிட்டல் திரையில் விளம்பரம் செய்ய முடிவு செய்து உள்ளது. இதற்கான டெண்டரை கோரி உள்ளது. இதன் மூலம், கோடிக்கணக்கில் வருவாய் ஈட்ட திட்டமிட்டு உள்ளது.

இதற்கு வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து, அவர்கள் கூறியதாவது:

டிஜிட்டல் திரையில் விளம்பரங்கள் செய்வதால் வாகனம் ஓட்டும் போது கவனம் சிதறும். இதனால், விபத்து ஏற்படும். ஏற்கனவே, மெட்ரோ துாண்களில் அழகான ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன.

மக்களின் நலனில் கவலையில்லாமல், மெட்ரோ நிறுவனம் பணம் சம்பாதிப்பதிலே கவனம் செலுத்துகிறது.

எனவே, டிஜிட்டல் திரைகளில் விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்பட்டால், ஓவியங்களை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us