தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ நாவில் எச்சில் ஊற வைக்கும் 'ஸ்பைசி தவா இட்லி'

 நாவில் எச்சில் ஊற வைக்கும் 'ஸ்பைசி தவா இட்லி'

 நாவில் எச்சில் ஊற வைக்கும் 'ஸ்பைசி தவா இட்லி'


ADDED : நவ 29, 2025 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 05:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சில நேரங்களில், வீட்டுக்கு திடீரென விருந்தாளி வருவர். அவர்களை உபசரிக்க அவசரத்தில் நேரம் இருக்காது. காலையில் தயாரித்த இட்லி மட்டுமே மிச்சமிருக்கும். என்ன செய்வது என, மண்டையை குழப்பிக்கொள்ள வேண்டாம். இட்லியில் சூப்பரான 'ஸ்பைசி தவா இட்லி' தயாரித்து அசத்துங்கள். அதை எப்படி செய்வது என, பார்க்கலாமா.

தேவையான பொருட்கள்

l இட்லிகள் - 4

l வெங்காயம் - 1

l தக்காளி - 1

l பச்சை மிளகாய் - 1

l இஞ்சி - சிறிய துண்டு

l கொத்துமல்லி - ஒரு கைப்பிடி

l தேங்காய் துருவல் - 1 ஸ்பூன்

l கறிவேப்பிலை - ஒரு கொத்து

l கடுகு - கால் ஸ் பூன்

l உளுத்தம் பருப்பு - கால் ஸ்பூன்

l வேர்க்கடலை அல்லது முந்திரிப்பருப்பு - சிறிதளவு

l மஞ்சள் துாள் - கால் ஸ்பூன்

l சாம்பார் மசாலா - 1 ஸ்பூன்

l பாவ் பாஜி மசாலா - 1 ஸ்பூன்

l நெய் அல்லது எண்ணெய் - 1 ஸ்பூன்

l வெண்ணெய் - 1 ஸ்பூன்

l உப்பு - சுவைக்கு ஏற்ப

செய்முறை: முதலில் இட்லிகளை சிறு, சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும். அடுப்பில் தோசைக்கல் வைத்து, மிதமான தீயில் வைக்கவும். தோசைக்கல்லில் நெய் அல்லது நெய் ஊற்றவும். சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போடவும். அதன்பின் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.

இந்த கலவையில் மஞ்சள் துாள், பாவ் பாஜி மசாலா, சாம்பார் மசாலா, உப்பு சேர்க்கவும். அனைத்தும் பொன்னிறமாக வதங்கிய பின், இட்லி துண்டுகளை போட்டு கிளறவும். இதன் மீது வறுத்து பொடித்த வேர்க்கடலை அல்லது முந்திரிப்பருப்பு, தேங்காய் துருவல், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கிளறவும். அதன் மீது வெண்ணெய் தடவி, நறுக்கிய கொத்துமல்லி தழையை துாவினால், சுவையான ஸ்பைசி தவா இட்லி தயார்.

இது சுவையாக இருக்கும். விருந்தினர்களிடம் பாராட்டும் கிடைக்கும்

- நமது நிருபர் - .

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us