தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/எம்.பி., பிரியங்காவுக்கு எளிமையாக நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம்

எம்.பி., பிரியங்காவுக்கு எளிமையாக நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம்

எம்.பி., பிரியங்காவுக்கு எளிமையாக நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம்


UPDATED : அக் 25, 2026 12:00 AM

ADDED : அக் 24, 2026 09:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 25, 2026 12:00 AM ADDED : அக் 24, 2026 09:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: சிக்கோடி தொகுதி காங்கிரஸ் எம்.பி.,யும், மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியின் மகளுமான பிரியங்காவுக்கு, திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

கடந்த, 2024 லோக்சபா தேர்தலில், பெலகாவியின், சிக்கோடி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட பிரியங்கா ஜார்கிஹோளி, எம்.பி., ஆனார்.

நாட்டின் மிகவும் இளம் வயது எம்.பி.,யான இவர், கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியின் மகள்.

இவருக்கு நேற்று முன்தினம், திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. பிரபல அமைச்சர் குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தும், எந்த ஆடம்பரமும் இல்லாமல், மிகவும் எளிமையாக இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

கோகாக் நகரின், கிளப் சாலையில் உள்ள, சதீஷ் ஜார்கிஹோளியின், ' ஹில் கார்டன்' இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் பாலசந்திர ஜார்கிஹோளி, எம்.எல்.சி., லக்கன் ஜார்கிஹோளி உட்பட, ஜார்கிஹோளி குடும்பத்தின் மூத்தவர்கள், உறவினர்கள் பங்கேற்றனர்.

ராய்ச்சூரின், தேவதுர்காவை சேர்ந்த கவுதம் பாட்டீல் என்பவரை, பிரியங்கா திருமணம் செய்யவுள்ளார். கவுதம் பாட்டீல் சார்ட்டர்ட் அக்கவுன்டென்டாக பணியாற்றுகிறார். இவரது தந்தை ஓய்வுபெற்ற ஆர்.டி.ஓ., அதிகாரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us