தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/பட்டாசு வெடிக்க விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்: அமைச்சர் பிரியங்க் கார்கே தகவல்

பட்டாசு வெடிக்க விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்: அமைச்சர் பிரியங்க் கார்கே தகவல்

பட்டாசு வெடிக்க விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்: அமைச்சர் பிரியங்க் கார்கே தகவல்


UPDATED : அக் 25, 2026 12:00 AM

ADDED : அக் 24, 2026 09:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 25, 2026 12:00 AM ADDED : அக் 24, 2026 09:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: ‘‘தீபாவளி பண்டிகையின் போது, பட்டாசு வெடிப்பது குறித்து, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து விதிமுறைகள் வெளியிடப்படும்,’’ என, உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்தார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

பட்டாசு வெடிப்பது குறித்து, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு பக்கம் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்கின்றனர். மற்றொரு பக்கம் பட்டாசும் வெடிக்க வேண்டும் என்கின்றனர். பட்டாசு வெடிப்பதால் மாசுபடும் காற்றை, நாம் தானே சுவாசிக்கிறோம்.

நம் கலாசாரத்தை கொண்டாடுவதுடன், சுற்றுச்சூழலை பாதுகாப்பதும் நமது பொறுப்பாகும். தீபாவளி பண்டிகையின் போது, பட்டாசு வெடிப்பது குறித்து, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து விதிமுறைகள் வெளியிடப்படும். இவற்றை பொது மக்கள் பின்பற்ற வேண்டும்.

சில நாட்களுக்கு முன், தசரா ஊர்வலத்தில் அதிகாலை வரை பட்டாசு வெடித்ததாக புகார் வந்தது. யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல், பண்டிகைகளை கொண்டாட வேண்டும். நள்ளிரவில் அதிக சத்தத்துடன் பட்டாசு வெடித்தால், மக்களுக்கு தொல்லையாக இருக்கத் தான் செய்யும்.

பண்டிகையை நாம் கொண்டாடும் போது, மற்றவர் நலனிலும் அக்கறை காட்டுவது நல்லது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us